• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிஎஸ்கே-வின் 9வது அதிசயம்: நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்‘வயதின் தடைகள் கடந்த தோனி’

சிஎஸ்கே-வின் 9வது அதிசயம்: நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்‘வயதின் தடைகள் கடந்த தோனி’

ஐபிஎல் 2021 தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்னொரு முறை அழைத்துச் சென்றார் தோனி, நீண்ட இடைவெளிக்குப் பிறகாக இருந்தாலும் தோனியின் கடைசி நேர அதிரடி முக்கியமான தருணத்தில் கை கொடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் மண்ணைக் கவ்வியது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்னொரு முறை அழைத்துச் சென்றார் தோனி, நீண்ட இடைவெளிக்குப் பிறகாக இருந்தாலும் தோனியின் கடைசி நேர அதிரடி முக்கியமான தருணத்தில் கை கொடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் மண்ணைக் கவ்வியது.

    இதன் மூலம் 9வது முறையாக மஞ்சள் படையை ஐபிஎல் பைனலுக்கு அழைத்துச் சென்றார் தோனி. 173 ரன்கள் இலக்கை 20வது ஓவரில் தன் பவுண்டரிகள் மூலம் தோனி வெற்றி பெற்றார். கடைசி ஓவரில் 13 ரன்கள் மீதமிருக்க கொஞ்சம் அதிர்ஷ்டமும் கைக்கொடுக்க தோனி ஸ்கொயர் கட், புல் ஷாட்டில் பவுண்டரிகளை அடித்து இறுதிக்கு இட்டுச் சென்றார். கிரிக்கெட் கடவுளாகக் கருதப்படும் தோனி நேற்று பினிஷ் செய்ய வேண்டும் என்பது ஆட்டத்தின் விதி.

    ஆவேஷ் கான் போட்ட ஷார்ட் பிட்ச் பந்தை தோனி மிட்விக்கெட் மேல் அடித்த சிக்ஸ், ‘ஃபிளாட் சிக்ஸ்’ அதாவது பேட்டிலிருந்து புறப்பட்ட அதே உயரத்திலேயே பவுண்டரிக்கு மேலே சென்று விட்டது. 173 ரன்கள் இலக்கு 19.4 ஓவர்களில் முடிந்தது. கடைசி பவுண்டரி ஷேக்ஸ்பியர் ஒரு நாடகத்தில் பயன்படுத்திய ‘Cometh the Hour, Cometh the Man’ என்பது போல், நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்னு ரஜினி சொன்னத் போல் தோனி தன் மட்டையின் மூலம் சொன்னதாகவே படுகிறது.

    வெற்றி ரன்களை அடித்தவுடன் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி தன் மகள் ஜிவாவை வாரி அணைத்து ஆனகொண்டார். முன்னதாக ராபின் உத்தப்பா 44 பந்துகளில் 63 விளாசினார், அஸ்வினை பந்து வீச்சிலிருந்து தூக்குமாறு செய்தார், இது ஒரு பெரிய திருப்பு முனை, ருதுராஜின் நேர்மையான அணுகுமுறை உண்மையில் அவர் மீதான மரியாதையை அதிகரிக்கவே செய்கிறது. ருதுராஜ் 50 பந்துகளில் 70 ரன்கள், கடைசியில் அக்சர் படேலின் அற்புதமான கேட்சுக்கு வெளியேறினார்.

    கடைசியில் தோனி இறங்கினார், அவரது ரசிகர்கள் பதற்றத்துடன் எதிர்நோக்கினர், தோனி வெற்றி பெறாமல் செய்து விட்டால் மற்றவர்கள் கழுவி ஊற்றுவதை நினைத்து தல ரசிகர்கள் அவரை விடவும் அதிகக் கவலை பட்டனர், ஆனால் அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தார் தோனி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: