Home /News /sports /

CSKvsRCB | வெற்றிபாதைக்கு திரும்பிய சி.எஸ்.கே... ரசிகர்கள் மகிழ்ச்சி

CSKvsRCB | வெற்றிபாதைக்கு திரும்பிய சி.எஸ்.கே... ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐ.பி.எல் 2020

ஐ.பி.எல் 2020

IPL 2020 | CSKvsRCB | இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை தவறவிடாத ருத்துராஜ் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார்.

    பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல் 2020 தொடரின் 44-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய படிகல் 22 ரன்னிலும், ஃபின்ச் 15 ரன்னிலும் களமிறங்கினார். ஆனால் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான கோலி - டி-வில்லியர்ஸ் ஜோடி இந்தப் போட்டியிலும் சிறப்பாக பார்ட்டனர்ஷிப் அமைத்து விளையாடினர்.

    ஆனால் ரன்ரேட்டை சி.எஸ்.கே அணி கட்டுக்குள் வைத்திருந்தது. டி-வில்லியர்ஸ் 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தீபக் சாஹர் பந்துவீச்சில் அவுட்டானார். இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய சி.எஸ்.கே பவுலர்கள் பெங்களூரு அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்கள். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரர்களாக டூ-பிளசிஸ், ருத்துராஜ் களமிறங்கினார்கள். சி.எஸ்.கே அணிக்கு இன்றைய போட்டியின் தொடக்கம் சிறப்பாகவே அமைந்தது. இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை தவறவிடாத ருத்துராஜ் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார்.

    டூ-பிளசிஸ் 25 ரன்களிலும், அம்பதி ராயுடு 39 ரன்களிலும் அவுட்டாகினர். ஆனால் மறுபுறம் ருத்துராஜ் அதிரடியாக விளையாடியதால் சி.எஸ்.கே அணி வெற்றிபாதைக்கு சென்றது. இறுதியாக 18.4 ஓவர்களில் சி.எஸ்.கே அணி இலக்கை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்து. ருத்துராஜ் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது ரசிகர்களிடேயே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.















    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: IPL 2020

    அடுத்த செய்தி