• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஹைதரபாத்தை வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சிஎஸ்கே

ஹைதரபாத்தை வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சிஎஸ்கே

CSK vs SRH

CSK vs SRH

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் சார்ஜா மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே-வில் சாம் குரணுக்கு பதிலாக டூவைன் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து பேட்டிங்கை ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜோசன் ராய் 2 ரன்னில் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் 11 ரன்களில் பிராவோ பந்துவீச்சில் சிக்கினார்.

    சிஎஸ்கேவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் ரன் எடுக்க தவறினார்கள். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் அதிபட்சமாக தொடக்க வீரர் விருதமான் சஹா 44 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்களையும், பிராவோ 2 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் சர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.

    இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் வழக்கம் போல் சிறப்பான அடிதளத்தை அமைத்தனர். ருதுராஜ் - டூபிளெசிஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். ருதுராஜ் 45 ரன்கள் எடுத்திருந்த போது ஹோல்டர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    மொயின் அலி 17 ரன்களில் ரஷித் கான் பந்துவீச்சில் அவுட்டாக அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 2 ரன்களில் வந்த வேகத்தில் அவுட்டாகி நடையை கட்டினார். நிதனமாக விளையாடிய டூ பிளெசிஸ் 41 ரன்களில் அவுட்டானார். இதனால் சிஎஸ்கே அணி 108 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து இருந்தது. கேப்டன் தோனியும் அம்பாதி ராயுடும் பொறுமையாக விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பெற செய்தனர்.

    சிஎஸ்கே அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: