விளையாட்டு

  • associate partner

ருத்ரதாண்டவமாடிய ருத்துராஜ்... ஜாலம் காட்டிய ஜடேஜா... கடைசி பந்தில் சி.எஸ்.கே த்ரில் வெற்றி

CSKvsKKR | சி.எஸ்.கே இறுதி ஓவர்களில் சாம் கர்ரன் மற்றும் ஜடேஜா அதிரடியாக விளையாடினார்கள். இதனால் போட்டி பரபரப்பான கட்டத்திற்கு சென்றது

ருத்ரதாண்டவமாடிய ருத்துராஜ்... ஜாலம் காட்டிய ஜடேஜா... கடைசி பந்தில் சி.எஸ்.கே த்ரில் வெற்றி
CSKvsKKR
  • Share this:
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி ஜடேஜா சி.எஸ்.கே அணியை த்ரில் வெற்றி பெற செய்தார்.

ஐ.பி.எல் 2020 தொடரின் 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், நிதிஷ் ராணா களமிறங்கினார்கள். கொல்கத்தா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய சுப்மன் கில் (26), சுனில் நரைன்(7), ரிங்கு சிங் (11) சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்கள்.


ஆனால் நிதிஷ் ரானா மட்டும் தனியாளாக அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 4 சிக்கஸர், 10 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்தார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், ருத்துராஜ் களமிறங்கினார்கள். வாட்சன் 14 ரன்களில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

வாட்சனை அவுட்டானதை தொடர்ந்து வந்த அம்பதி ராயுடு - ருத்துராஜ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சிறப்பாக விளையாடிய ருத்துராஜ் அரைசதம் கடந்து அதிரடியை தொடர்ந்தார். சி.எஸ்.கே அணி 118 ரன்கள் எடுத்திருந்த போது அம்பதி ராயுடு 38 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் நரைனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.சி.எஸ்.கே அணியினன் கேப்டன் மகேந்திர சிங் தோனி பொறுப்புடன் விளையாட நினைத்தார். ஆனால் தனக்கு சிம்மசொர்ப்பனமாக இருக்கும் சுழற்பந்து வீச்சில் இந்த போட்டியிலும் சிக்கி 1 ரன்னில் வருண் சக்கரவா்த்தி பவுலிங்கில் சிக்கி நடையை கட்டினார். அணிக்கு நம்பிக்கையாக இருந்த ருத்துராஜ் 87 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

சி.எஸ்.கே இறுதி ஓவர்களில் சாம் கர்ரன் மற்றும் ஜடேஜா அதிரடியாக விளையாடினார்கள். இதனால் போட்டி பரபரப்பான கட்டத்திற்கு சென்றது. கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பெர்குசான் 19 ஓவரை வீசினார். அந்த ஓவரை சிறப்பாக விளையாடிய ஜடேஜாவால் சி.எஸ்.கே 20 ரன்கள் எடுத்தது.

இதனால் கடைசி ஓவரில் வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கமலேஷ் நாகர்கோட்டி பந்துவீசினார். அந்த ஓவரில் முதல் 5 பந்தில் சி.எஸ்.கே 9 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜடேஜா விளையாடினார். பரபரப்பின் உச்சத்திற்கே சென்ற போட்டியின் கடைசி பந்தில் ஜடேஜா சிக்ஸர் விளாசி போட்டியை முடித்தார். ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்கள் விளாசி சி.எஸ்.கே-விற்கு வெற்றி தேடி தந்தார்.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading