• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs SRH IPL 2021: நாங்கதான் பலமா திரும்பி வருவோம்னு சொன்னோம்ல: தோனி

CSK vs SRH IPL 2021: நாங்கதான் பலமா திரும்பி வருவோம்னு சொன்னோம்ல: தோனி

எல்லோ ஆர்மி பிளே ஆஃப் தகுதி

எல்லோ ஆர்மி பிளே ஆஃப் தகுதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற ஹைதராபாத் அணியிடம் ஆயுதங்கள் இல்லை, அதனால் எதிர்பார்த்தபடியே தோல்வி தழுவியது, எதிர்பார்த்தபடியே சென்னை சூப்பர் கிங்ஸ் 11வது முறையாக பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

  • Share this:
    சன் ரைசர்ஸ் அணி 134/7 என்று மட்டுப்படுத்தப்பட்டது. ஷார்ஜாவின் புதிய பிட்ச் சென்னை பிட்ச் போல் தோனிக்குச் சாதகமாக அமைந்தது. பந்துகள் கொஞ்சம் ஸ்விங் ஆகின. அதனால் டிவைன் பிராவோவை கொண்டு வந்தார் அவரும் 4 ஓவர் 17 ரன் 2 விக்கெட் என்று அசத்தினார். சிஎஸ்கே அணியை புரட்டி எடுத்தவர்களில் கேன் வில்லியம்சன் சிறந்தவர், இதுவரை 327 ரன்களை 47 என்ற சராசரியில் 145 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் சென்னை அணிக்கு எதிராக எடுத்துள்ளார்.

    எனவே வில்லியம்சனை கழற்றி விட்டால் பாதி சன்ரைசர்ஸ் பெவிலியனுக்குச் சென்றதற்குச் சமம், பிராவோ வில்லியம்சனை நேர் பந்தில் எல்.பி செய்து 11 ரன்களில் வீழ்த்தினார். ஜேசன் ராய் ஹேசில்வுட் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முக்கிய பேட்ஸ்மென்கள் பெவிலியன் திரும்ப 6வது ஓவர் முதல் 14வது ஓவர் வரை 48 பந்துகள் அதாவது 8 ஓவர்கள் பவுண்டரியே அடிக்கவில்லை. (உஷ் கண்டுக்காதீங்க தருணம்) ஜடேஜா 3 ஓவர் 14 ரன் 1 விக்கெட் அளவுக்கெல்லாம் பெரிய பவுலிங்கெல்லாம் இல்லை, சன்ரைசர்ஸ் அணியிடம் வெற்றி பெறுவதற்கான சித்தம், உறுதி இல்லை என்பதுதான் உஷ் கண்டுக்காதீங்க போட்டியின் முக்கிய அம்சம்.

    சேசிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சீரிய ஓப்பனர் போல் அருமையாக ஆடி 38 பந்துகளில் 45 எடுக்க டுபிளெசிசும் இவரும் சேர்ந்து 75 ரன்கள் எடுக்க அங்கேயே ஆட்டம் முடிந்து விட்டது. இந்த வெற்றி குறித்து தோனி கூறும்போது, “இந்த வெற்றி பெரிய விஷயம். கடந்த முறை ஆட்டம் முடிந்த பிறகான பரிசளிப்பு நிகழ்ச்சியில் நான் கூறினேன், நாங்கள் மிகவும் வலுவாக மீண்டும் வருவோம் என்றேன்.

    கடந்த ஆண்டு தோற்றோம் மீண்டும் வருவோம் என்றேன், அதுதான் இப்போது நடந்துள்ளது, காரணம் கடந்த முறை என்ன தவறு செய்தோம் என்பதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம். வீரர்களுக்குத்தான் பெருமை போய் சேர வேண்டும், உதவிப்பயிற்சியாளர்களுக்கும்தான். இந்தப் பிட்ச் பந்துகள் நின்று திரும்பும் ரகம் அல்ல. ஆனால் பவுன்ஸ் இருந்தது. பவுலர்கள் தங்கள் லெந்த்தையும் வேகத்தையும் சிறப்பாக மாற்றி மாற்றி வீசினார்கள்.

    இதைத்தான் அவர்களிடம் போட்டியின் தொடக்கத்தின் போது நானும் கூறினேன், அதை அப்படியே செயல்படுத்தினார்கள், ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே கிரேட். சிஎஸ்கே சார்பாகக் கூறுகிறேன் ரசிகர்களை நினித்து ரொம்ப பெருமைப் படுகிறோம்” என்றார் தோனி.

    Also Read: ஹைதரபாத்தை வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சிஎஸ்கே

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: