CSK vs RCB | ஒரே ஒரு வீரர் எங்களை வென்று விட்டார், அது ஜடேஜாதான்: விராட் கோலி புகழாரம்

CSK vs RCB | ஒரே ஒரு வீரர் எங்களை வென்று விட்டார், அது ஜடேஜாதான்: விராட் கோலி புகழாரம்

விராட் கோலி

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 19வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நன்றாக ஆர்சிபி அணி கட்டுப்படுத்தியது, ஆனால் ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரில் போட்டியின் போக்கையே மாற்றி விட்டார்.

  • Share this:
    மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 19வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நன்றாக ஆர்சிபி அணி கட்டுப்படுத்தியது, ஆனால் ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரில் போட்டியின் போக்கையே மாற்றி விட்டார்.

    ஹர்ஷல் படேலின் ஒரே ஓவரில் 5 சிக்சர்களுடன் 37 ரன்கள் விளாசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஒரு ரன் அவுட்டையும் செய்து ஆல்ரவுண்ட் அசத்தல் நிகழ்த்தினார். அதுவும் 360 டிகிரி ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு வீசிய பந்து அற்புத வகை, டெஸ்ட் கிளாஸ். அதாவது லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி சற்றே திரும்பி மட்டையைக் கடந்து ஸ்டம்பை பதம் பார்த்தது, கிளாஸ் டெலிவரி அது. இதனையடுத்து 122 ரன்களில் ஆர்சிபி முடிந்து முதல் தோல்வியை சிஎஸ்கேவிடமிருந்து பரிசாகப் பெற்றது, கோலியை விட பெட்டர் கேப்டன் என்பதை தோனி நிறுவினார்.

    ஹர்ஷல் படேலிடம் கடைசி ஓவரை கொடுத்ததை தவறெனக் கூற முடியாது, காரணம் அவர் அதுவரை 3 ஓவர் 14 ரன்கள் 2 விக்கெட். டுபிளெசியையும் ரெய்னாவையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஆர்சிபி அணியை நேர் நிமித்தினார் ஹர்ஷல் படேல், ஆனால் கடைசி ஓவரில் ஒரே புல்டாஸாகப் போட்டு சிக்சர்களை வாரி வழங்கி 37 ரன்களைக் கொடுத்து கடைசியில் 4 ஓவர் 51 ரன்கள் என்று பரிதாபமாக முடிந்தார்.

    இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு விராட் கோலி கூறியதாவது:

    இந்தத் தோல்வியை நீங்கள் சரியான நோக்கில் பார்க்க வேண்டும். இந்தத் தோல்வி சரியான நேரத்தில்தான் வந்துள்ளது. என்ன தவறாகிப் போனது என்பதை சிந்திக்க வேண்டும். இந்தத் தோல்வி உண்மையில் எங்கள் அணிக்கான பாசிட்டிவ் பின்னூட்டமே.

    இவ்வகைத் தோல்விகள் சீசன் தொடக்கத்திலேயே வந்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். முக்கிய தருணங்களில் ஆட்டத்தில் நாங்கள் தான் ஆதிக்கம் செலுத்தினோம், ஆனால் சிலவற்றில் கோட்டை விட்டோம் (ஜடேஜாவுக்கு 0-வில் கேட்சை விட்டது).

    ஜட்டு (ஜடேஜா) ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்து சென்று விட்டார், அதாவது ஒரே ஒரு வீரர் எங்களை வென்று விட்டார். ஹர்ஷல் படேலுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம், ஏனெனில் நேற்று அவர் நன்கு செட் ஆன ரெய்னா, டுபிளெசிஸ் இருவரையும் வீழ்த்தி ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார். இதன சரியான வழியில் நாம் பார்க்க வேண்டும்.

    3ம் நிலையில் மாற்றி மாற்றி இறக்குவோம் ஏனெனில் எங்களிடம் மேக்ஸ்வெல், ஏ.பி.டிவில்லியர்ஸ் பின்னால் உள்ளனர். எனவே 3ம் நிலையில் இறங்குபவர்களிடம் ஆட்டத்தை நம் பக்கம் திருப்புமாறு ஆட வலியுறுத்துவோம்.

    பேட், பந்து, பீல்டிங் என்று ஜடேஜா அசத்துவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நம் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பிரமாதமாக பேட் செய்வதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகவே உள்ளது.

    இவ்வாறு கூறினார் விராட் கோலி.
    Published by:Muthukumar
    First published: