முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2020 CSKvRCB Live Score | கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய கோலி...வெற்றியை துரத்தும் சென்னை... ஸ்கோர் நிலவரம்

IPL 2020 CSKvRCB Live Score | கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய கோலி...வெற்றியை துரத்தும் சென்னை... ஸ்கோர் நிலவரம்

விராட் கோலி

விராட் கோலி

IPL 2020 CSK v RCB Live Score | நீண்ட நாளுக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடி 90 ரன்கள் குவித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

  • Last Updated :

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் படிக்கல் சிறப்பாக விளையாடி 33 ரன்கள் எடுக்க, ஆரோன் பின்ச் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கோலி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

படிக்கல்லின் விக்கெட்டை தாகூர் வீழ்த்த, டிவில்லியர்ஸ் அடுத்ததாக ரன்கள் ஏதும் இல்லாமலேயே வெளியேற்றப்பட்டார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

Live Score:

top videos

    170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், வாட்சன் மற்றும் டூபிளீசிஸ் களமிறங்கினர். வாட்சன் 14 ரன்களிலும், டுபிளீசிஸ் 8 ரன்களிலும் வெளியேறினர். ராயுடு மற்றும் ஜெகதீசன் பேட்டிங் செய்துவருகின்றனர். 9.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

    First published:

    Tags: IPL 2020