• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சேவாக் முகத்தில் கரிபூசிய சென்னை சூப்பர் கிங்ஸ்: கேலி ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

சேவாக் முகத்தில் கரிபூசிய சென்னை சூப்பர் கிங்ஸ்: கேலி ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி சரிவு கண்டதயடுத்து கடுமையான குசும்பு பிடித்த சேவாக் ட்விட்டரில் கிண்டலில் இறங்க பிறகு சென்னை வெற்றிபெற்று அவர் முகத்தில் கரிபூசியது, நெட்டிசன்கள் சேவாக் கேலிக்கு ரியாக்ட் செய்துள்ளனர்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி சரிவு கண்டதயடுத்து கடுமையான குசும்பு பிடித்த சேவாக் ட்விட்டரில் கிண்டலில் இறங்க பிறகு சென்னை வெற்றிபெற்று அவர் முகத்தில் கரிபூசியது, நெட்டிசன்கள் சேவாக் கேலிக்கு ரியாக்ட் செய்துள்ளனர்.

    முதல் 3 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது டுபிளெசிஸ், மொயின் அலி டக்கில் வெளியேற, ராயுடு காயமடைந்து 0-வில் வெளியேற, சுரேஷ் ரெய்னா போல்ட்டிடம் வெளியேறினார். இதனையடுத்து 7/3 என்று ஆகிவிட்டது, உள்ளபடியெ 7/4 தான் ஏனெனில் ராயுடு பிறகு இறங்கவில்லை. பிறகு ருதுராஜ் கெய்க்வாட் 88 ரன்கள் வெளுத்துக் கட்ட, ஜரேஜா 26 ரன்கள் பங்களிப்பு செய்ய டிவைன் பிராவோ காட்டடி தர்பாரில் 7 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார், சென்னை சூப்பர் கிங்ஸ் 156 ரன்களை எட்ட மும்பை இந்தியன்ஸ் பிராவோ, தீபக் சாகர் பவுலிங்கில் 136 ரன்களுக்கு மட்டுப்பட்டு தோல்வி அடைந்தது.



    இந்நிலையில் 7/3 என்று சிஎஸ்கே இருந்த நிலையில் சேவாக் கடும் கிண்டலாக என்னப்பா இது கிரிக்கெட்டா, ஹாக்கியா என்று கேலி ட்வீட் செய்தார். இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரை பிடித்து வாங்கி விட்டனர். சேவாக் உங்கள் மரியாதையை இழந்து விடாதீர்கள் என்று ஒரு நெட்டிசன் எச்சரித்தார்.

    நேற்றைய போட்டியில் மும்பை இலக்கை விரட்டும்போது மிக அதிர்ச்சிகரமாக சவுரவ் திவாரியை இறக்கினர், உடம்பு பொதுபொதுவென்று குண்டாக இறங்கி அவரால் ஓடவும் முடியவில்லை, பவுண்டரிகளும் அடிக்க முடியவில்லை. தோனி அவர் விக்கெட்டை வீழ்த்தினால் வேறு யாராவது வந்து சாத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அவர் விக்கெட்டை வீழ்த்த வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார் போலும் அவரும் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆனால் என்ன பயன்?

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: