• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs KKR : IPL 2021 வெற்றியாளர் யார்? வாசிம் ஜாஃபர் சரியான கணிப்பு

CSK vs KKR : IPL 2021 வெற்றியாளர் யார்? வாசிம் ஜாஃபர் சரியான கணிப்பு

CSK vs KKR

CSK vs KKR

ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற வாசிம் ஜாபரின் கணிப்பு கட்டாயம் நிறைவேறும். ஏன் என்றால் அவர் சொன்ன வாக்கியம் அப்படி.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடர் இறுதி போட்டி இன்று மாலை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 3 முறை சாம்பியன் வென்ற சிஎஸ்கே மற்றும் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் யார் வெல்வார்கள் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    கொல்கத்தாவின் மிகப் பெரிய பலமாக இருப்பது சுழற்பந்து வீச்சாளர்கள். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் உல் ஹசன் என 3 பேரும் தரமாக பந்து வீசி வருகிறார்கள். இதனால் தான் கொல்கத்தா பேட்டிங்கில் மந்தமாக இருந்தாலும் குறைந்த ரன்களில் எதிரணியை அவுட்டாக்கி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் சென்னை அணியின் பேட்டிங் வரிசை கொல்கத்தா அணிக்கு சவாலகவே இருக்கும். ஆரம்பத்தில் ருதுராஜ், டூபிளெசிஸ். மிடில் ஆர்டரில் உத்தப்பா, ராயுடு, தோனி. பின்வரிசையில் ஜடேஜா, பிராவோ என பலமாக இருப்பதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    சிஎஸ்கே கடைசி போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் கொல்கத்தா அணியின் காயம் காரணமாக விளையாடமல் இருக்கு ரஷல் இன்றையப் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. சென்னை அணியை சமாளிக்க ஒரு மிக சிறந்த ஆல் ரவுண்டர் தேவைப்படுவதால் ரஷலை களமிறக்க கொல்கத்தா திட்டமிட்டுள்ளது. கடைசி நேரத்தில் இந்த மாற்றம் சென்னை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஷகிப் உல் ஹசனுக்கு பதிலாக ரஷல் இன்றையப் போட்டியில் களமிறங்குவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.

    Also Read : IPL 2021 Final: சென்னைக்கு எதிராக கொல்கத்தா மாஸ்டர் பிளான்... Playing 11-ல் மாற்றம்?

    இதனிடையே இன்றையப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கணித்துள்ளார். அவர் கணித்துள்ளது நிச்சயம் நடைபெறும். ஏனென்றால் அவர் பதிவிட்டுள்ள வாக்கியம் அப்படி. அவர் தனது டவிட்டரில், நடப்பு ஐபிஎல் தொடரை உலகக் கோப்பையை வென்ற கேப்டன் மற்றும் நியூசிலாந்து பயிற்சியாளர் கொண்ட அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.



    மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் வென்றது. அவர் 2007 ஐசிசி டி 20 உலகக் கோப்பையையும் 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்றுள்ளார். மோர்கன் & கோ இங்கிலாந்துடன் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 கோப்பையை வென்றது. மெக்கல்லம் மற்றும் ஃப்ளெமிங் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள். ஃப்ளெமிங் சிஎஸ்கே அணிக்கும், மெக்கல்லம் கேகேஆர் அணிக்கும் பயிற்சியாளர்களாக உள்ளனர்.

    இதானல் வாசிம் ஜாஃபரின் பதிவு இரு அணிகளுக்கு பொறுந்து என்பதால் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: