இயான் மோர்கன் நல்ல டி20 கேப்டன் அல்ல: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் சேவாக்

சேவாக்.

மிக மெதுவாக ஓவர்களை வீசியதற்காக கொல்கத்தா அணியின் தோல்வி கேப்டன் இயான் மோர்கனின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இதோடு மட்டுமல்லாமல் சேவாக் வேறு அவரது நெஞ்சில் ஈட்டியை இறக்கியுள்ளார்.

  • Share this:
    மிக மெதுவாக ஓவர்களை வீசியதற்காக கொல்கத்தா அணியின் தோல்வி கேப்டன் இயான் மோர்கனின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இதோடு மட்டுமல்லாமல் சேவாக் வேறு அவரது நெஞ்சில் ஈட்டியை இறக்கியுள்ளார்.

    220 ரன்கள் என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இலக்கை விரட்டும்போது 31/5 என்று சரிந்த கொல்கத்தா பிறகு தினேஷ் கார்த்திக், கமின்ஸ், ரஸல் ஆகியோரது பேட்டிங் மூலம் 200 வரை வந்து 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.

    இது சென்னைக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்து முதலிடத்தைப் பிடிக்க, கொல்கத்தாவுக்கு 3வது தோல்வியாக அமைந்தது. அன்று இயான் மோர்கனின் கேப்டன்சி போதாமையை கம்பீர் தாக்கினார், நேற்று சேவாக் தாக்கிப் பேசியுள்ளார்.

    தோனி ஆட்டம் முடிந்த பிறகு கடைசி ஓவர் 6 பந்துகள் போடப்பட்டு இறுதி வரை சென்றிருந்தால் இன்னும் நெருக்கமாகப் போயிருக்கும் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக டுபிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக சேவாக் கூறியதாவது:

    இயான் மோர்கன் உலகின் சிறந்த டி20 கேப்டனாக இருக்க முடியாது, அவர் இல்லை. ஆம்! ஒருநாள் கிரிக்கெட்டில் வலுவான அணியுடன் அவர் சிறந்த கேப்டன். யார் நன்றாக பேட் செய்தாலும் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று தந்தனர்.

    யார் நன்றாக பவுலிங் போட்டாலும் இங்கிலாந்துக்கு அவர் கேப்டன்சியில் வெற்றி பெற்றுக் கொடுத்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் அவரிடம் அது போன்ற வெற்றி அணி இல்லை. அது போக டி20 கிரிக்கெட்டில் மோர்கன் சிறந்த கேப்டன் அல்ல. தோனியுடன் மோர்கனை ஒப்பிடுவது சரியான ஒப்பீடாக இருக்காது.

    மேலும் இங்கிலாந்து போல் இவருக்கு வலுவான அணி இங்கு அமையவில்லை. ஏனெனில் ஒரு அணியின் கேப்டன் எவ்வளவு சிறந்தவரோ அந்த அணியும் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

    நல்ல அணியை அவர் கட்டமைத்தால் அடுத்த ஐபிஎல் தொடரில் அவர் சாதிக்கலாம். அல்லது அவர்கள் வீரர்கள் இந்தத் தொடரில் அசாதாரணமாக ஆடினால் மீண்டு வரலாம். இரண்டு வீரர்கள் ரன்கள் எடுத்து, இரண்டு பவுலர்கள் விக்கெட்டுகளை எடுத்தால் போதும் கொல்கத்தா நல்ல அணியாக மாறிவிடும். வெற்றி பெறும். இப்போதைக்கு அந்த அளவுக்கு இயான் மோர்கனை என்னால் சிறந்த கேப்டனாகப் பார்க்க முடியவில்லை.

    இவ்வாறு கூறினார் விரேந்திர சேவாக்.
    Published by:Muthukumar
    First published: