• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs KKR | 19-வது ஓவரில் மாஸ் காட்டிய ஜடேஜா: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி

CSK vs KKR | 19-வது ஓவரில் மாஸ் காட்டிய ஜடேஜா: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி

ஜடேஜா

ஜடேஜா

கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

  • Share this:
    அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 38-வது போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. கொரோனா பாதிப்புக்கு பிறகு தொடங்கிய இரண்டாவது சுற்றில் நடைபெற்ற போட்டிகளில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. அதனால், இந்தப் போட்டி மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

    பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். கில் 9 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இயான் மோர்கனும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    திரிபாதி அதிரடியாக ஆடி 45 ரன்களைக் குவித்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்களைச் சேர்க்க கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களைக் குவித்தது. இரண்டாவது களமிறங்கிய சென்னை அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் மற்றும் பஃப் டூப்ளஸி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். ரூத்ராஜ் 40 ரன்களிலும், டூப்ளஸி 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதுவரையில் சென்னையின் கட்டுக்குள் இருந்த ஆட்டம் மொத்தமாக கொல்கத்தாவின் கைக்குள் சென்றது. அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கடைசியாக களமிறங்கிய ஜடேஜா 19-வது ஓவரில் அதிரடியைக் காட்டி ஆட்டத்தை மீட்டெத்தார். 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து வந்தார்.

    இறுதி ஓவரில் சுனில் நரேன் பந்துவீச்சில் சாம் கரனும், ஜடேஜா ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எளிதாக வெற்றி பெற வேண்டிய சூப்பர் ஓவருக்கு சென்றுவிடுமோ என்ற நிலையில் தீபக் சஹர் சென்னை அணியின் வெற்றி உறுதிப்படுத்தினார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்து வெற்றியை உறுதிப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது. இந்த தோல்வியால் கொல்கத்தா அணி 3-வது இடத்துக்கு முன்னேறமுடியாமல் போனது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: