ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2021, SRH vs CSK: இன்று இதுதான் சிஎஸ்கே அணி- ஹைதராபாத் வெல்லுமா அல்லது...?

IPL 2021, SRH vs CSK: இன்று இதுதான் சிஎஸ்கே அணி- ஹைதராபாத் வெல்லுமா அல்லது...?

கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்.

கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்.

சிஎஸ்கே அணி, கேப்டன் எம்.எஸ்.தோனி ஒரு விதமாக non-playing கேப்டனாக இருந்தாலும் அவரது விக்கெட் கீப்பிங், அந்த இடத்திலிருந்து எதிரணி பேட்ஸ்மென்களின் நகர்வு, பவுலர்களின் லெந்த்தை துல்லியமாகக் கணித்து அபார கேப்டன்சி செய்து வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இன்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று விட்டால் சிஎஸ்கே பிளே ஆஃப் தகுதியை உறுதி செய்துவிடும், மாறாக சன் ரைசர்ஸ் அணி கடந்த போட்டியில் வென்ற ஆதிக்க மனநிலையைத் தொடர்ந்து வென்றால் அந்த அணிக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு தொலைவில் ஒரு சான்ஸ் உள்ளது. யுஏஇயில் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸை அடித்து நொறுக்கியது.

  அதன் பிறகு மேலும் 2 போட்டிகளில் வென்று கோப்பை வெல்வதை நோக்கி எல்லோ ஆர்மி முன்னேறி வருகிறது. இந்நிலையில் இன்று ஷார்ஜாவில் சன் ரைசர்ஸுடன் சிஎஸ்கே மோதுகிறது. சிஎஸ்கே அணி வலுவடைந்து கொண்டே செல்ல சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தேய்ந்து கொண்டே சென்றது. ஒரே ஒரு மாற்றம் சென்னை அணியில் செய்தால் அது ராயுடுவுக்குப் பதிலாக உத்தப்பா வரலாம். ஆனால் தோனி ரொம்ப கன்சர்வேட்டிவ் அவ்வளவு சுலபமாக மாற்றம் செய்யமாட்டார்.

  ஒரு செட்டில்டு அணியுடனேயே தோனி ஆட விரும்புவார், அதை தொந்தரவு செய்ய மாட்டார், கோலிதான் செட்டில் ஆகவிடாமல் மாற்றிக் கொண்டேயிருப்பார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் சாதாரணமாக எடை போட முடியாது. டேவிட் வார்னரை ட்ராப் செய்து ஜேசன் ராயைக் கொண்டு வந்துள்ளனர், இவரது பேட்டிங் தீபக் சாகர், ஷர்துல் தாக்கூருக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  அன்று ராயல்ஸ் அணிக்கு எதிராக சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார், ஜேசன் ஹோல்டர் அபாரமாக வீசினர் கடைசி 17 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதே போல் பேட்டிங்கில் ஜேசன் ராயுடன் இறங்கும் சகாவும் நன்றாக பந்தை கனெக்ட் செய்கிறார், பெரிய பவுலர்களையும் சிக்ஸ் விளாசுகிறார். சன் ரைசர்ஸ் அணிக்கு அன்றைய வெற்றி பெரிய நம்பிக்கையை அளித்திருக்கும். சென்னை அணியில் உண்மையிலேயே ருதுராஜ் தவிர டாப் ஆர்டர் நன்றாக இல்லை. சீக்கிரமே தோனியை கிரீசுக்குள் கொண்டு வந்து விட்டால் சன் ரைசர்ஸ் பெரிய அளவில் ரன்களை சிஎஸ்கேவுக்கு குறைக்கலாம்.

  சிஎஸ்கே என்னதான் யானை என்றாலும் எதிரணி ஒழுங்காக ஆடினால் யானைக்கும் அடிசறுக்கும். எனவே சன்ரைசர்ஸ் அணி சிறிய இலக்குகளை வெற்றிகரமாக தடுக்கக் கூடிய அணிதான், ஆனாலும் உஷ் கண்டுக்காதீங்க போட்டியாகி விடுமோ என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.

  இந்த முறை சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ், ஆர்சிபி மற்றொரு அணி கேகேஆர் அல்லது மும்பையாக இருக்கலாம் இதில் சிஎஸ்கே, ஆர்சிபி அணி இறுதிப் போட்டியில் மோதலாம், மீண்டும் சிஎஸ்கே கோப்பையை வெல்வதன் மூலம் ‘பார்! தோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமித்தது சரிதானே’ கோலி அணியையே இறுதிப்போட்டியில் வீழ்த்தி விட்டாரே என்று நம்மையெல்லாம் எண்ண வைக்கலாம்.

  சிஎஸ்கே அணி: ருதுராஜ் கெய்க்வாட், டுபிளெசிஸ், ராயுடு, சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, தோனி, ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாகர், ஜோஷ் ஹேசில்வுட்

  சன் ரைசர்ஸ் அணி: கேன் வில்லியம்சன், ஜேசன் ராய், சஹா, ஜேசன் ஹோல்டர், பிரியம் கார்க், அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், மணீஷ் பாண்டே, அபிஷேக் சர்மா.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, IPL 2021, Kane Williamson, MS Dhoni