2023 ஆம் ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த அவலுடன் எதிர்பார்த்திருக்கும் விளையாட்டு நிகழ்வு ஐபிஎல் தொடராகும். ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ்நாடு என்று மட்டுமல்லாது உலக முழுவதிலும் சிஎஸ்கே அணிக்கு வெறித்தமான ரசிகர்கள் உள்ளனர்.
நட்சத்திர வீரர் தோனியின் அணியாக கருதப்படும் சென்னை இதுவரை 4 முறை ஐபிஎல் பட்டத்தை வென்று தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேவேளை, கடந்த ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக அமையவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து 9ஆவது இடத்திற்கு சரிந்தது. மோசமான தோல்வியால் ரசிகர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த நிலையில், அணியில் முக்கிய மாற்றங்களை கொண்டு புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதற்கான முக்கிய நகர்வை சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி வாங்கியது. பென் ஸ்டோக்ஸின் வருகை சிஎஸ்கே ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் டி20 கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையிலும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஸ்டோக்ஸ் திகழ்ந்தார். எனவே, வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வலுவான கம்பேக் தரும் என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
இதையும் படிங்க: 2022- ஆம் ஆண்டின் டாப் 5 டி20 பேட்ஸ்மேன்கள்… வரிசைப்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்
இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மாஸ் வீடியோவை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் 2022ஆம் ஆண்டின் வெளியான படங்களில் உள்ள மாஸ் வசனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் டிரென்டான வசனங்களை வீரர்களின் அக்ஷனுடன் பொருத்தி எடிட் செய்துள்ளது. சூப்பர் 10 என்ற தலைப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
🔊 Sounds of 2022 meets the pride! 🦁#Super10 #WhistlePodu 🦁💛 pic.twitter.com/0cPmtQnVDw
— Chennai Super Kings (@ChennaiIPL) December 31, 2022
வீடியோ ஆரம்பத்தில் ஓப்பனிங் வீரர் கான்வே கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தில் பகத் பாசில் பேசிய வசனமான "ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எங்களுக்கு இல்ல, உங்களுக்கு இருந்தா மீறப்படும்" என்பதுடன் தொடங்குகிறது. வீடியோவின் இறுதியில் ஸ்டோக்ஸ் புகைப்படத்தை பதிவிட்டு தல தோனி, 'பயமா இருக்கா, போகப் போக இன்னும் பயங்கரமா இருக்கும்' என்று வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த மாஸ் வசனம் மற்ற அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் சொல்லும் விதமாக மற்ற அணிகளுக்கு சொல்வது போல் உள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, CSK, IPL, IPL 2023, MS Dhoni, Viral Video