ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனி இன்னும் எத்தனை வருஷம் ஆடுவாரு..? கேப்டன்சிக்கு ஜடேஜா கொண்டு வாங்க - சிஎஸ்கே விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் மைக்கேல் வாகன்

தோனி இன்னும் எத்தனை வருஷம் ஆடுவாரு..? கேப்டன்சிக்கு ஜடேஜா கொண்டு வாங்க - சிஎஸ்கே விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் மைக்கேல் வாகன்

தோனி, ஜடேஜா

தோனி, ஜடேஜா

தோனி இன்னும் எத்தனை மேட்ச் ஆடப்போறாரு. பேசாம ஜடேஜாகிட்ட கேப்டன்சியை கொடுத்துடுங்கப்பா என கொளுத்தி போட்டுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஆஃப் தி ஷிப் என்றால் அது தோனி தான். ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் தல தோனி. எத்தனையோ ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள் சென்னை அணிக்காக ஆடிய போதிலும் தோனிக்கு மாற்றாக யாரையும் கேப்டனாக சென்னை ரசிகர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தோனி விளையாடாத ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருந்தார்.

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. என வானத்தைப்போல திரைப்படம் போல சி.எஸ்.கே ஒரு குடும்பமாக செயல்பட்டு வருகிறது. சிஎஸ்கே மேட்ச் என்றாலே மைதானமே களைக்கட்டும். மைதானம் முழுக்க கேட்கும் தோனி.. தோனி... என்ற குரல்கள். தோனி, ரெய்னாவின் மகள்கள் மைதானத்தில் சப்போர்ட் செய்யும் காட்சிகள். மேட்ச்-க்கு பிறகு தோனி சக வீரர்களின் குழந்தைகளுடன் விளையாட என விக்ரமன் படம் போல் இருக்கு சேப்பாக்கம் மைதானம். இந்த முறை மைதானத்துக்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்பதால் இதெல்லாம் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கிறது.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 200-வது முறையாக வழிநடத்திய கேப்டன் தோனி, வெற்றியையும் பதிவு செய்தார். இந்த நேரத்தில் சி.எஸ்.கேவுக்கு தோனி இன்னும் எத்தனை மேட்ச் ஆடப்போறாரு. பேசாம ஜடேஜாகிட்ட கேப்டன்சியை கொடுத்துடுங்கப்பா என கொளுத்தி போட்டுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்.

“சிஎஸ்கே கேப்டன் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார். இன்னும் 3 ஆண்டுகள் விளையாடலாம் இல்லையென்றால் இந்த சீசனோடு கூட முடித்துக்கொள்ளலாம். அதன் பின்னர் யாரை கேப்டனாக தேர்ந்தெடுக்கலாம் என்ற கேள்வி எழும். யாரைச் சுற்றி அணியை கட்டமைக்கப்போகிறீர்கள். என்னைப்பொருத்தவரையில் ஜடேஜா நல்ல தேர்வாக இருப்பார். ஜடேஜாவை சுற்றி அணியை கட்டமைக்க வெண்டும். அவர் சிறந்த பந்துவீச்சாளர். நல்ல ஃபீல்டர். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். மனரீதியாகவும் ஆரோக்கியமான சி்ந்தனை உடையவர்.

ஜடேஜாவால் எந்த இடத்தில் இறங்கியும் பேட் செய்ய முடியும். 4 அல்லது 5 வது என தேவைப்படும் இடத்தில் இறங்கி விளையாடக்கூடியவர். பேட்டிங் ஆர்டரை பொருத்து முதல் ஓவரை வீச வேண்டும் என்றாலும் சிறப்பாக பந்து வீசுவார். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் எனக் கூறியுள்ளார். தோனி ஒரு கட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறுவார் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இது அணி நிர்வாகமும் தோனியும் எடுக்க வேண்டிய முடிவு. இந்த விவகாரத்தில் மைக்கேல் வாகன் கருத்துகளை சி.எஸ்.கே ரசிகர்கள் விரும்பவில்லை. எது எப்படியோ அடுத்த சிஎஸ்கே கேப்டனுக்கான ரேஸில் சின்ன தல ரெய்னா, டுப்ளிஸில் என இரண்டு பேர் வரிசையில் நிற்க மூன்றாவதாக ஜடேஜாவின் பெயரை முன்மொழிந்துள்ளார் வாகன்.

First published:

Tags: IPL 2021, MS Dhoni, Ravindra jadeja, Suresh Raina