Home /News /sports /

சிஎஸ்கே அணியில் ஜடேஜாவுக்குப் பதில் ரெய்னா?

சிஎஸ்கே அணியில் ஜடேஜாவுக்குப் பதில் ரெய்னா?

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

கடந்த மே மாதம் ஐபிஎல் 2022 முடிந்ததில் இருந்து ஜடேஜா சிஎஸ்கே நிர்வாகத்துடன் முற்றிலும் தொடர்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு ஜடேஜா ஆடுவது சந்தேகம்தான், இந்நிலையில் இன்னொரு அதிருப்தி வீரரான ‘சின்ன தல’ ரெய்னாவை அணிக்கு மீண்டும் அழைக்கப்படலாம் என்று சிலவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கடந்த மே மாதம் ஐபிஎல் 2022 முடிந்ததில் இருந்து ஜடேஜா சிஎஸ்கே நிர்வாகத்துடன் முற்றிலும் தொடர்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு ஜடேஜா ஆடுவது சந்தேகம்தான், இந்நிலையில் இன்னொரு அதிருப்தி வீரரான ‘சின்ன தல’ ரெய்னாவை அணிக்கு மீண்டும் அழைக்கப்படலாம் என்று சிலவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக சிஎஸ்கே அணி ஒரு குடும்பம் போல் செயல்படுவதாக அனைவராலும் விதந்தோதப்படும். தோனியின் கதவு வீரர்களுக்காக 24 மணி நேரம் திறந்திருக்கும் என்றெல்லாம் பில்ட் அப் உண்டு. ஆனால் ஜடேஜா விவகாரத்தில் என்னதான் மனக்கசப்பு என்பது வெளியுலகுக்கு ஒருபோதும் வராது.

    வீரர்கள் ஆண்டு முழுவதும் சிஎஸ்கே நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பார்கள். ஆனால் என்சிஏவில் மறுவாழ்வு பெற்ற ஜடேஜா, மீண்டும் இந்திய அணிக்கு வருவதற்கு முன்பு, சென்னை அணியுடனான அனைத்து தொடர்பையும் முடித்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

    கேப்டன் பொறுப்பில் ஒருவரை அணி நியமிக்கலாம் ஆனால் அவரிடம் தனியாகப் பேசவேண்டியதையெல்லாம் அணி நிர்வாகம் வெளியில் சொல்ல ஆரம்பித்தால் அது வீரர்களிடையே மனக்கசப்பையே ஏற்படுத்தும். கிரெக் சாப்பல் இப்படித்தான் மீடியாவை வைத்துக் கொண்டு நாடகமாடியதால் அவரது பயிற்சிக்காலமே சர்ச்சைகளுக்குரியதாக மாறியது.

    ஜடேஜாவைக் கேப்டனாக நியமித்து விட்டு ‘அவர் வெறும் டாஸ் மட்டுமே போடுகிறார் என்பது அவருக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பை அளிக்கலாம் என்று மாற்றம் கொண்டு வந்தோம்’ என்று சொன்னால் அவர் கேப்டன்சி செய்யவில்லை, அவருக்கு கேப்டன்சி வரவில்லை என்பதும் ஒவ்வொன்றையும் ஸ்பூனில் எடுத்து ஊட்டி விட முடியாது என்று தோனி கருதியதை வெளியில் சொல்லியும் ஜடேஜாவுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தினர்.

    இன்று 3 அணிகள் அவரை வாங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர், இதனையடுத்து இதே போல் சற்றே மனஸ்தாபத்தில் சிஎஸ்கேவுடனான உறவிலிருந்த ரெய்னாவை ஏலத்தில் எடுக்க மறுத்தது சிஎஸ்கே, ஆனால் அவரை இன்று ஜடேஜாவுக்கு பதிலாக அழைக்கலாமா என்று கருதுவதாக செய்திகள் எழுந்துள்ளன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dhoni, IPL, Ravindra jadeja, Suresh Raina

    அடுத்த செய்தி