2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்று வரும் நிலையில் அணிகள் தங்கள் தக்கவைப்பு வீரர்களையும், விடுவித்த வீரர்களையும் ஜனவரி 20-ம் தேதிக்குள் அறிவிக்க பிசிசிஐ கெடு நிர்ணயித்திருந்தது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டியலை வெளியிட்டுள்ளது
சிஎஸ்கே தக்கவைத்த வீரர்கள்: தோனி, ஜடேஜா, ரெய்னா, ஃபாப் டு பிளெசிஸ், சாம் கரன், டிவைன் பிராவோ, ஹாசில்வுட், லுங்கி இங்கிடி, ராயுடு, கரண் சர்மா, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், என்.ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், ஆர்.சாய் கிஷோர்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: சாவ்லா, கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங், ஷேன் வாட்சன் (ரிட்டையர்டு)
ஹர்பஜனை விடுவித்ததால் அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர் இல்லை. கேதார் ஜாதவ் இனிமேல் இருந்தால் சிக்கல்தான், தோனி ஆட்டம் மழுங்கி விட்டது. ஏலத்தில் இருக்கும் பணத்தில் எந்த வீரர்களை சிஎஸ்கே தேர்வு செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.