விளையாட்டு

  • associate partner

CSK vs DC | சென்னை அணியில் முக்கிய மாற்றங்கள்..?

IPL 2020 | CSK | இன்றையப் போட்டி ஷார்ஜா மைதனாத்தில் நடைபெறுவதால் பேட்ஸ்மேன்கள் பங்கு அதிகமாக இருக்கும்.

CSK vs DC | சென்னை அணியில் முக்கிய மாற்றங்கள்..?
சி.எஸ்.கே அணி
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் டெல்லி அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 13-வது சீசனில் சி.எஸ்.கே அணி தடுமாற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள சி.எஸ்.கே 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கு சி.எஸ்.கே தகுதி பெற வேண்டுமென்றால் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பவுலர்கள் சி.எஸ்.கே அணியில் இருந்து பந்துவீசினார்கள். கர்ன் சர்மா, பியூஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்து இருந்தனர்.


துபாய் மைதானம் சுழற்பந்துக்கு ஏற்றாற்போல் இருந்ததால் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்தனர். இன்றையப் போட்டி ஷார்ஜா மைதனாத்தில் நடைபெறுவதால் பேட்ஸ்மேன்கள் பங்கு அதிகமாக இருக்கும். இதனால் மேலும் ஒரு பேட்ஸ்மேன் அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ்க்கு பதிலாக களமிறங்கிய ஜெகதீசன் 33 ரன்கள் சேர்த்தார். மேலும் ஒரு பேட்ஸ்மேன் உடன் களமிறங்க சி.எஸ்.கே திட்டமிட்டால் ஜெகதீசனுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சி.எஸ்.கே அணி : சாம் குரான், ஷேன் வாட்சன், டூ-பிளசிஸ், அம்பதி ராயுடு, ஜெகதீசன், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாஹர், சர்துல் தாகூர், கர்ன் சர்மா/பியூஷ் சாவ்லா













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading