• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • MI vs CSK | சிஎஸ்கே அணியில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

MI vs CSK | சிஎஸ்கே அணியில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

சிஎஸ்கே

சிஎஸ்கே

IPL 2021 | CSK vs MI | டுபிளெசிஸ், ஆல்ரவுண்டர் சாம் கரன் ஆகியோர் சில போட்டிகளில் இப்போது ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோத உள்ளன. ஐபிஎல் புள்ளிப்பட்டியல் தற்போதைய நிலவரப்படி சிஎஸ்கே 2-வது இடத்திலும், மும்பை 4-வது இடத்திலும் உள்ளது.

    சிஎஸ்கே, மும்பை அணிகள் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மும்பை அணி தான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. மும்பை 19 போட்டிகளிலும், சென்னை 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த முறை இந்தியாவில் நடந்த முதல் சுற்று ஐபிஎல் போட்டிகளில் நன்றாக ஆடிய டுபிளெசிஸ், ஆல்ரவுண்டர் சாம் கரன் ஆகியோர் சில போட்டிகளில் இப்போது ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், மொயின் அலி தோனி போன்றவர்கள்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை முடிவு செய்கின்றனர்.

    சிஎஸ்கே உத்தேச அணி : ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, சர்துல் தாகூர், தீபக் சாஹர், லுங்கி நிகிடி, ஹாசில்வுட்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: