• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிஎஸ்கே 10 வீரர்களுடன் விளையாடுகிறது... தோனி பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் கருத்து

சிஎஸ்கே 10 வீரர்களுடன் விளையாடுகிறது... தோனி பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் கருத்து

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில் கேப்டன் தோனி ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடர் சிஎஸ்கே அணிக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளது. 11 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே 9 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் போட்டிகளுடன் வெளியேறியது. இதனால் சிஎஸ்கேவின் வெற்றி முகம் மங்க ஆரம்பித்து விட்டது என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தொடர் வெற்றியை பதிவு செய்து வருகிறது. சிஎஸ்கே அணிக்கு மீதம் 3 போட்டிகள் உள்ளது. ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகள் உடன் சிஎஸ்கே மோத உள்ளது.

    ப்ளே ஆப் சுற்றுக்கு  மற்ற அணிகள் தகுதி பெறசிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றியும்  முக்கியமான ஒன்றாகும். சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்ப கேப்டன் தோனியின் தலைமையே காரணம் என்று புகழ்ந்து வருகின்றனர். தோனி கேப்டன்ஷிப்பில் ஜொலித்தாலும் பேட்டிங்கில் அவரது ஃபார்ம் ஏமாற்றமாகவே உள்ளது.

    கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 11.40 ஆக உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    Also Read : உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா... அஸ்வின் - மோர்கன் மோதல் குறித்து டெல்லி உரிமையாளர் கருத்து

    ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசுகையில், மகேந்திர சிங் தோனி பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் விளையாடி வருவதால் எந்த நன்மையும் இல்லை. கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அவர் சிறப்பாக செயல்படுகிறார். சென்னை அணி 10 வீரர்கள் மற்றும் ஒரு கேப்டன் உடன் விளையாடி வருகிறது என்று அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும் சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்பியது தோனியின் கேப்டன்ஷிப் தான் என்றும் கூறி உள்ளார். சிஎஸ்கே தற்போது சாம்பியன்ஸ் சூப்பர் கிங்ஸ் என மாற காரணம் தோனியின் கேப்டன்ஷிப் தான். அவர் இல்லாவிட்டால் இந்த சூழல் உருவாகி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: