Home /News /sports /

ருதுராஜ் கெய்க்வாட் மாஸ் அண்ட் தி கிளாஸ்..!

ருதுராஜ் கெய்க்வாட் மாஸ் அண்ட் தி கிளாஸ்..!

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்

டி20 கிரிக்கெட் என்றாலே வாணவேடிக்கை காட்டும் வீரர்களுக்கு மத்தியில் கிளாஸான ஆட்டம் மூலம் மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறார் ருத்ராஜ்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  சிஎஸ்கே அணியை அங்கிள்ஸ் ஆர்மின்னு மற்ற அணி ரசிகர்கள் விமர்சன கனைகளை வீசிக்கொண்டிருக்கும் போது இளம்சிங்கம் ஒன்று துள்ளலான இன்னிங்ஸ் மூலம் மிரட்டிக்கொண்டிருக்கிறது.

  ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2020-ம் ஆண்டு ஒரு மோசமான வருடமாக அமைந்தது. சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. தோனியின் கேப்டன்சி, வீரர்களின் ஃபார்ம் என எல்லாமே விமர்சிக்கப்பட்டது. தோனியே ஒரு கட்டத்தில் இளம்வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். அது விமர்சனத்துக்குள்ளானது.

  2018-ல் கம்பேக் கொடுத்த சிஎஸ்கே அணியில் ஆரம்பத்தில் ஷேன் வாட்சன் சொதப்பினாலும் முக்கியமான ஆட்டங்களில் விஸ்வரூபம் எடுத்தார். சிஎஸ்கே 2018 ஐபிஎல் சாம்பியன் ஆனதில் வாட்சன் பங்கு முக்கியமானது. 2020 ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷேன் வாட்சன் , சுரேஷ் ரெய்னா மிஸ்ஸிங் இது சிஎஸ்கேவுக்கு பிரச்னையை கொடுத்தது. சரியான ஒப்பனிங் இல்லாததால் முதல் கோணம் முற்றிலும் கோணம் என்கிற ரீதியில் சிஎஸ்கே பெரிய ஸ்கோர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தது. இதன்காரணமாக பிளே ஆஃப் வாய்ப்பு கை நழுவிப்போனது. எஞ்சியிருந்த நான்கு போட்டிகளில் இளம் சிங்கம் ருதுராஜ் கெய்க்வாட்டை ஓப்பனிங்கில் இறக்கினார் தோனி.

  தோனி


  மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் பூஜ்ஜித்துடன் நடையைக்கட்டினார். மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் தோனி. இந்தியாவே கொண்டாடும் தோனியே தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறிவர் தானே. ருதுராஜ் கெய்க்வாட் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 72 ரன்களை விளாசி மிரட்டினார். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் என மிரட்டினார். அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரையா தல இத்தனை நாளா பென்சில் உட்கார வெச்சிருந்தீங்கன்னு  சிஎஸ்கே ரசிகர்களே கொஞ்சம் நொந்துதான் போனார்கள்.

  ருதுராஜ் கெய்க்வாட்


  கடந்தாண்டு ஐபிஎல் இறுதியில் “இந்த வருடம் நாங்கள் நினைத்தது போல் இல்லை அடுத்த வருடம் கூடுதல் பலத்துடன் வருவோம்'' என தோனி கூறினார். கடந்த ஐபிஎல்லில் காயம்பட்டு போன சிங்கம். இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்து மிரட்டிக்கொண்டிருக்கிறது. தோனி, ரெய்னா, டுபிளசிஸ், பிராவோ, ஜடேஜா என நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் ருத்ராஜ் கெய்வாட் தனியாக தெரிகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் சீனியர் வீரர்கள் சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுகளை இழந்தபோது தனியாளாய் சிங்கமாய் கர்ஜித்தார் ருதுராஜ் கெய்க்வாட்.

  தோனி


  இக்கட்டான சூழலிலும் நிதானமான ஆட்டத்தை கையாளுவதே ருதுராஜ் கெய்க்வாட்டின் பலம். எப்போது யாரை அடிக்க வேண்டும் என சரியாக திட்டமிட்டு ஆடுகிறார். ட்ரெண்ட் பவுல்ட், மில்னே இருவரும் சிஸ்கே வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டிருக்க அவர்களிடம் ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தார் ரூத்ராஜ். 100 ரன்களை கடக்குமா என ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க 156 என்ற சவாலான ஸ்கோரை சிஎஸ்கே எட்ட உதவினார். பும்ராவின் கடைசி ஓவரிலும் கிரிக்கெட்டின் இலக்கணம் மாறாமல் ரன்களை சேர்த்தார். டி20 கிரிக்கெட் என்றாலே வாணவேடிக்கை காட்டும் வீரர்களுக்கு மத்தியில் கிளாஸான ஆட்டம் மூலம் மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.

  ருதுராஜ் கெய்க்வாட்


  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி தோற்றாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ருதுராஜ் கெய்க்வாட்டை கொண்டாடி வருகிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் ரூத்ராஜ் 95 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்தார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளை ஜடேஜா ஆடினார். எனவே ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடிப்பாரா என ரசிகர்கள் ஏங்கினர். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தது இந்த இளஞ்சிங்கம். இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பக்கபலமாக இருக்கிறார். மைல்ஸ் டூ கோ ருதுராஜ் கெய்க்வாட்..
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai Super Kings, CSK, Dhoni, Dwayne Bravo, IPL 2021, News On Instagram, Ravindra jadeja, Suresh Raina

  அடுத்த செய்தி