IPL 2021 | CSK | சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு: ஜோஷ் ஹேசில்வுட் திடீர் விலகல்

சிஎஸ்கே

ஆஸ்திரேலிய அணியின் வரவிருக்கும் சர்வதேச தொடர்களுக்கு தன்னை புத்துணர்வுடன் வைத்துக் கொள்வதற்காக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் 2021 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

  • Share this:
    ஆஸ்திரேலிய அணியின் வரவிருக்கும் சர்வதேச தொடர்களுக்கு தன்னை புத்துணர்வுடன் வைத்துக் கொள்வதற்காக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் 2021 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    அதாவது தன் குடும்பத்துடன் நாட்களைச் செலவிட்டு, பிறகு டி20 உலகக்கோப்பைக்கும், ஆஷஸ் தொடருக்கும் தன்னை தயார் செய்து கொள்வதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு அவர் கூறியிருப்பதாவது:

    பல்வேறு காலக்கட்டங்களில் இப்போது 10 மாத கால கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறோம், தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுகிறோம். எனவே அடுத்த 2 மாதங்களுக்கு ஆஸ்திரேலியாவில் என் வீட்டில் குடும்பத்துடன் ஓய்வு எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளேன். பெரிய குளிர்காலத் தொடர் வேறு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் பெரிய தொடர் ஆகும்.

    அது முடிந்தவுடன் வங்கதேசத்துடன் டி20 தொடர் இருக்கிறது. பிறகு டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர். எனவே பெரிய 12 மாதங்கள் காத்திருக்கிறது. எனவே ஆஸ்திரேலிய அணிக்காக ஆடுவதற்காக என்னை மனத்தளவிலும் உடலளவிலும் தயார் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன்.

    இது நான் எடுத்த முடிவு, எனக்கு இது மிகவும் சரியானதாகவே படுகிறது.

    என்று கூறியுள்ளார்.

    ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் 3வது ஆஸ்திரேலிய வீரர் ஆவார் ஜோஷ் ஹேசில்வுட். முன்னதாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் ஆஸி. வீரர் ஜோஷ் பிலிப், சன் ரைசர்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் ஆகியோரும் தொடரிலிருந்து விலகியது குறிப்ப்பிடத்தக்கது.

    ஜோஷ் ஹேசில்வுட் 3 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே இதுவரை ஆடி 1 விக்கெட்டையே கைப்பற்றியிருந்தாலும் சிக்கன விகிதம் ஓவருக்கு 6.4 என்று குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: