• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 | ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் படைத்த வரலாற்று சாதனை

IPL 2021 | ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் படைத்த வரலாற்று சாதனை

ருதுராஜ் கெய்கவாட்

ருதுராஜ் கெய்கவாட்

ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்ச் கேப்பை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் 2021 இறுதிப் போட்டி துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 192 ரன்களை எடுத்தது.

    இந்த போட்டியில் சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் 25 ரன்கள் எடுத்த போது நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் 13 போட்டிகளில் 626 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இதனை டூ பிளெசிஸ் முறியடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பை 2 ரன்களில் அவர் தவறவிட்டார்.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் ஆரஞ்ச் கேப் வென்ற வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். ருதுராஜ் 24 வயதில் ஆரஞ்ச் கேப் வென்று இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள்

    ருதுராஜ் கெய்க்வாட் (635), சிஎஸ்கே - 16 போட்டிகள்
    டூ பிளெசிஸ் (633), சிஎஸ்கே - 16 போட்டிகள்
    கேஎல் ராகுல் (626), பஞ்சாப் கிங்ஸ் - 13 போட்டிகள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: