சிதறிய ஸ்டெம்ப்... அசந்து நின்ற தல... சி.எஸ்.கே-வின் புதிய பந்துவீச்சாளர் தோனியை வீழ்த்தி மாஸ் - வீடியோ

சேப்பாகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சி.எஸ்.கே வீரர்களின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி போட்டியின் போது சிஸ்கே அணியின் புதிய பந்துவீச்சாளர் ஹரிசங்கர் ரெட்டி பந்துவீச்சில் தோனி ஸ்டெம்பை பறிகொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

  ஐ.பி.எல் 14-வது சீசன் ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. ஐ.பி.எல் தொடருக்கான பயற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தற்போதே தொடங்கி விட்டனர். இதற்காக கடந்த வாரம் சென்னை வந்த தோனி கொரோனா தனிமைப்படுத்தலை முடித்து கொண்டு அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

  ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற கடந்த ஐ.பி.எல் சீசனில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் இந்த சீசனில் மீண்டும் சி.எஸ்,கே வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டுமென்பதால் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் உள்ளனர்.

  இந்நிலையில் சேப்பாகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சி.எஸ்.கே வீரர்களின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கேப்டன் தோனிக்கு சி.எஸ்.கே-வில் புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஹரிசங்கர் ரெட்டி பந்துவீசுகிறார். அவரது பந்தை சமாளிக்க முடியாமல் தோனி ஸ்டெம்பை பறிகொடுக்கிறார். ஸ்டெம்ப் சில அடி தூரம் தூக்கி வீசப்படுகிறது.  ஹரிசங்கர் ரெட்டி ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை தொகையான 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். அவரது வேகமும் தரமான பந்துவீச்சினால் தோனியை அவுட்டாகிய விதத்தையும் பார்க்கும் போது அவர் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.எஸ்.கே அணி ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது.
  Published by:Vijay R
  First published: