IPL CSK HEAD COACH STEPHEN FLEMING HINTS AT ROPING IN TIM SEIFERT FOR CSK MUT
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணியில் நியூஸி.யின் புதுமுக அதிரடி வீரர் செய்ஃபர்ட்- பிளெமிங் சூசகம்
நியூஸி. வீரர் டிம் செய்ஃபர்ட்.
யுஏஇ-யில் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில் கடுமையாகச் சொதப்பி வெளியேறிய தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நியூஸிலாந்தின் புதுமுக அதிரடி தொடக்க வீரரான டிம் செய்ஃபர்ட்டைக் கொண்டு வர சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பரிசீலித்து வருகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டி20 தொடரில் செய்பர்ட் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.
பிரெண்டன் மெக்கல்லமின் அதிரடி வகையறாவுடன் செய்ஃபர்ட்டின் ஆட்டம் ஒப்பிடப்பட்டு வருகிறது, மேலும் இவர் பிரெண்டன் மெக்கல்லம் கைவண்ணத்தில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் வர்ணனை செய்து கொண்டிருந்த பிளெமிங், செய்ஃபர்ட்டைக் குறிப்பிட்டு, “மஞ்சள் சீருடையில் ஓர் அணி உள்ளது. அது உங்களை (செய்ஃபர்ட்) எதிர்நோக்குகிறது, பிரெண்டன் மெக்கல்லம் அணி மட்டுமல்ல, மற்ற அணிகளும் உள்ளன” என்று மஞ்சள் சீருடை சிஎஸ்கே அணிக்கு அவரை எடுப்பது போல் தெரிவித்தார்.
செய்ஃபர்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 139.68 என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2021-ஐப் பொறுத்தவரை 8 அணிகளுடனேயே நடைபெறும் என்பதால் இந்தத் தொடருக்கான மினி வீரர்கள் ஏலம் நடைபெறும்போது செய்ஃபர்ட்டை சிஎஸ்கே வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.