• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிஎஸ்கே அணிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி... தல தோனி உற்சாகம்

சிஎஸ்கே அணிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி... தல தோனி உற்சாகம்

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஐபிஎல் தொடரின் 2-வது பாதியின் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே மகிழ்ச்சியாக உள்ள நிலையில் அடுத்த குட் நியூஸ் வெளியாகி உள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 2-வது பாதி ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட சிஎஸ்கே முன்னேறவில்லை. அதே சோக நிலை தற்போது ஐக்கிய அமீரகத்தில் தொடருமா என்ற அச்சத்தில் ரசிகர்கள் இருந்தனர். முதல் போட்டியே பலம் வாய்ந்த மும்பை அணியோடு சிஎஸ்கே மோதியது. போட்டி ஆரம்பித்த சில ஓவர்களில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது.

    ஆனால் தொடக்க வீரர் ருதுராஜ் பின்வரிசையில் ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோரின் அதிரடியால் சிஎஸ்கே அணி மும்பை கௌரவமான இலக்கை நிர்ணயத்தது. பவுலிங்கில் பிராவோ மற்றும் சாஹரின் அட்டாக்கில் மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்த வெற்றியின்  மூலம் 12 புள்ளிகளோடு சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இந்நிலையில் அக்டோபர் மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் வீரர்களுக்கு பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதாக கூறி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது. நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்த நிலையில் தற்போதும் இங்கிலாந்து ரத்து செய்துள்ளது.

    இதனால் சிஎஸ்கே அணியில் உள்ள இங்கிலாந்து வீரர்களான மொயீன் அலி, சாம் கரண் ஆகியோர் 2-வது பாதி முழுவதும் விளையாடுவார்கள். பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன் இங்கிலாந்து வீரர்கள் விலகுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்கள் இந்த சீசன் முழுவதும் விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    POINTS TABLE:

    SCHEDULE TIME TABLE:

    ஐபிஎல் தொடரின் 2-வது பாதியின் முதல் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை சிஎஸ்கே பிடித்து மகிழ்சியாக உள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து வீரர்களும் இந்த சீசன் முழுவதும் தொடருவார்கள் என்ற செய்தி அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: