ஐபிஎல் 2021 | முகமது ஷமியின் காலை தொட்டு கும்பிட்ட பின் 4 விக்கெட்களை வீழ்த்தினார் தீபக் சஹார்

ஷமி காலை தொட்டு கும்பிட்ட தீபக் சாஹர்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

 • Share this:
  கிரிக்கெட் களத்தில் மூத்த வீரர்களின் ஆசியை பெற்று மரியாதை செலுத்துவதும், பெருமைப்படுத்தும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை - பஞசாப் போட்டியில் இதுப்போன்ற காட்சி அரங்கேறி உள்ளது. சி.எஸ்.கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் காலை தொட்டு கும்பிட்டார்.

  இதன்பின் இந்த போட்டியில் தீபக் சாஹர் 4 விக்கெட்களை சாய்த்தார். தீபக் சாஹரின் அற்புதமான பந்துவீச்சு சி.எஸ்.கே-வின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. மேலும் ஷமி காலை தொட்டு கும்பிடும் தீபக் சஹாரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  நேற்றையப் போட்யில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமறிங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. தீபக் சாஹர் பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹோடா, நிக்கோலஸ் பூரான் உள்ளிட்ட 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

  சென்னை அணி எளிய இலக்குடன் களமிறங்கி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. ஐபிஎல் 2021 தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தி தனது முதல் வெற்றியை சி.எஸ்.கே பதிவு செய்துள்ளது. சி.எஸ்.கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தீபக் சாஹர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
  Published by:Vijay R
  First published: