ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கேதார் ஜாதவ் உட்பட 7 வீரர்களை அனுப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு: ரெய்னா தக்கவைக்கப் படுவாரா?

கேதார் ஜாதவ் உட்பட 7 வீரர்களை அனுப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு: ரெய்னா தக்கவைக்கப் படுவாரா?

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

கடைசி 3 போட்டிகளில் இளைஞர் ருதுராஜ் கெய்க்வாட் பிரமாதமாக ஆடி இளைஞர்கள் யார் என்று தோனிக்கு நிரூபித்துக் காட்டினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பிப்ரவரி மாதம் ஐபிஎல் 2021-க்கான மினி ஏலம் நடைபெறுவதையொட்டி அணிகள் தங்கள் வீரர்களை விடுவிக்கலாம் என்று தெரிகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேதர் ஜாதவ் உட்பட 7 வீரர்களை விடுவிக்கலாம் என்று தெரிகிறது.

  2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி படுமோசமாக ஆடியது, கேதார் ஜாதவ் கடுமையாக நெட்டிசன்களினால் கேலி செய்யப்பட்டார். அவர் பங்களிப்பு கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்ற அளவுக்கு தாழ்ந்து விட்டது.

  சுரேஷ் ரெய்னாவுக்கும் நிர்வாகத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த தொடரிலிருந்து பரபரப்பாக விலகினார், தோனிக்கு கொடுத்துள்ளது போல் அதே அறை தனக்கு வேண்டும் என்று அவர் கேட்டதாகவும் இதனையடுத்து அவருக்கு வழங்காததால் கோபமடைந்து தொடரிலிருந்து விலகுவதாகவும் அறிவித்து நாடு திரும்பியது அப்போது பரபரப்பானது. இந்நிலையில் ரெய்னா சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறி தோனி வகையாகச் சிக்கினார், முன்னாள் இந்திய கேட்பன் ஸ்ரீகாந்த், ‘இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்றால் கேதார் ஜாதவிடம் இருக்கிறதா?” என்று கேட்டு கிண்டலடித்தார்.

  கடைசி 3 போட்டிகளில் இளைஞர் ருதுராஜ் கெய்க்வாட் பிரமாதமாக ஆடி இளைஞர்கள் யார் என்று தோனிக்கு நிரூபித்துக் காட்டினார்.

  இந்நிலையில் இம்முறை புதிய வீரர்களை தேர்வு செய்ய சிஎஸ்கே முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் வீரர்கள் ஏலத்தில் செலவிட ரூ.15 லட்சம் மட்டுமே கைவசம் இருப்பதாகத் தெரிகிறது.

  குறைந்த பட்சம் ஒரு வீரரை ஒப்பந்தம் செய்யவே ரூ.20 லட்சம் தேவைப்படும். இதனால் கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா, கரண் சர்மா, இம்ரான் தாஹிர், உட்பட 7-8 வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. வாட்சனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL, Kedar Jadhav, MS Dhoni, Raina, Suresh Raina