ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ரவுண் ராபின் சுற்றை நிறைவு செய்துள்ளது. பங்கேற்றுள்ள 7 அணிகளுடனும் விளையாடிய சி.எஸ்.கே அணி, மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுடன் வெற்றி பெற்று, மற்ற ஐந்து அணிகளுடனும் மோசமான தோல்வியைச் சந்துத்துள்ளது.
இதுகுறித்து பேசிய தோனி, கப்பலில் நிறைய ஓட்டை இருப்பதாகவும் அதை சரிசெய்ய வேண்டும் எனவும் மனம் திறந்துள்ளார். பந்துவீச்சில் டெத் ஓவரில் மோசமாக விளையாடுவதாகவும், பேட்டிங்கில் பவர்ஃபுல் ஹிட்டர் இல்லை எனவும் வருத்தப்பட்டார். அடித்து ஆடவேண்டும், இல்லையென்றால் ஆட்டமிழந்து வெளியேற வேண்டும் எனவும் காட்டமாக பேசியுள்ளார்.
Also read: ராஜஸ்தானைப் போராடிக் காப்பாற்றிய டிவாட்டியா, பராக் - 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
தோனியின் இந்தக் கருத்து தொடர்பாக கிரிக்கெட் விமர்சகரும் அனலிஸ்டுமான விக்னேஷ் கூறுகையில், சி.எஸ்.கே அணியைப் பொருத்தவரை, விளையாடிய 7 போட்டிகளும் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. இதுவும் மோசமான ஆட்டத்திற்குக் காரணமாக அமையலாம். ஒரு போட்டியிலாவது முதலில் ஆடி நெருக்கடி இல்லாமல் ரன் குவித்தால் பழைய ஃபார்முக்கு வீரர்கள் திரும்ப வாய்ப்பு இருக்கிறது. மேலும், தொடக்கத்தில் வரும் பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த ரன்களை எடுக்கின்றனர். இதனால் பின்னால் வரும் வீரர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. எனவே தோனி கூறியதுபோல் அடித்து ஆடவேண்டும், இல்லையென்றால் ஆட்டமிழக்க வேண்டும் என்றார்.
சென்னை அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாகவும், ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பும் பட்சத்தில் கேப்டன் தோனி 3வது அல்லது 4வது வீரராக களமிறங்கி அணியை வழிநடத்த, மிடில் ஆர்டரில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனக் கூறுகிறார் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன். அத்துடன் பிராவோவை முன்கூட்டியே களமிறக்கி அடித்து ஆட நிர்பந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2010 ஆண்டு ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணி இதேபோல் முதல் சுற்றில் 4 போட்டியில் தோல்வியடைந்து, அடுத்த சுற்றில் அபாரமாக விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இதை மீண்டும் நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சி.எஸ்.கே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.