மகேந்திர சிங் தோனியின் கடைசி போட்டித்தொடர் 2021 ஐபிஎல் போட்டி தானா என கேட்டதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் அளித்துள்ள பதில் தோனி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
நட்சத்திர ஆட்டக்காரர், மின்னல் வேக விக்கெட் கீப்பர், கேப்டன் கூல் என தனது கேரியரில் பல பொறுப்புகளை சுமந்து எல்லாவற்றிலும் ஜொலித்து தனி முத்திரை பதித்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. டெஸ்ட் போட்டிகளிலிருந்து 2014ம் ஆண்டிலும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து 2019ம் ஆண்டிலும் ஓய்வு பெற்றுவிட்ட
தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்.
இந்திய அணியின் ஹீரோவாக திகழ்ந்த அவரின் ஆட்டத்தை தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ரசிகர்கள் பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர். 2019 சீசனுக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் உத்வேகத்தை இழந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடர் அணி வீரர்களிடையே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது சென்னை அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் தோனி, கடந்த ஜூலை 7ம் தேதி 40வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
வயது மூப்பு காரணமாக
தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறக்கூடும் எனவும் அவர் சென்னை அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பொறுப்பை ஏற்கக்கூடும் என ரசிகர்களிடையே ஒரு கருத்து ஏற்பட்டுள்ளது. யாரும் எதிர்பாராத முடிவுகளை அநாயசமாக எடுக்கக்கூடியவராக கருதப்படுவதால் தோனியின் ஓய்வு குறித்து அவரின் ரசிகர்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

தோனி
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்த கேள்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதனிடமே முன்வைக்கப்பட்டது. IANS செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “அவர் இன்னும் ஃபிட்டாக இருக்கிறார். பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். அவர் ஓய்வு பெற வேண்டும் என்பதற்கான காரணமே எழவில்லை. எங்களை பொறுத்தவரையில் அவர் சென்னை அணிக்கான சிறப்பான பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார். அவர் தற்போதும் சிறப்பானவர், ஒரு வீரராக தன்னுடைய அணிக்கு சிறப்பு தேடித்தருகிறார். அவர் ஒரு சிறந்த ஃபினிஷர், எங்களுக்கு நல்லதை செய்துகொண்டிருக்கிறார். என தெரிவித்தார்.
Also Read:
அதிகாரத்தை கையில் எடுத்த 5 வயது பலூன் விற்கும் சிறுவன்: வைரலான வீடியோ!
கடந்த 2008ம் ஆண்டு முதலாவது ஐபிஎல் சீசனில் இருந்து தொடர்ந்து சென்னை அணியில் இடம்பெற்று வருபவர்
தோனி. அவரின் தலைமையின் கீழ் தொடர்ந்து 10 சீசனாக சிஎஸ்கே இறுதிப் போட்டியில் விளையாடியிருக்கிறது. இதுவரை 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2019 சீசனில் கடைசி பந்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. 2020ம் ஆண்டு தான் சென்னை அணி அதளபாதாள நிலைக்கு தள்ளப்பட்டது, இருப்பினும் 2021ம் ஆண்டு மிக வலிமையாக தங்களில் பழைய நிலைக்கு சென்னை அணி வந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தோனியின் ஓய்வு இப்போதைக்கு இல்லை என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருப்பது தோனியின் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.