• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs KKR | சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்த டுப்ளஸி.. சரவெடி காட்டும் உத்தப்பா..

CSK vs KKR | சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்த டுப்ளஸி.. சரவெடி காட்டும் உத்தப்பா..

Du plessis

Du plessis

ருதுராஜை தொடர்ந்து ராபின் உத்தப்பா டுப்ளஸியுடன் ஜோடி சேர்ந்தார்.

  • Share this:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதி போட்டியில் டுப்ளஸி அபாரமாக அரை சதம் அடித்துள்ளார்.

ஐபிஎல் 2021 சீசனின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனர்கள் ருதுராஜ் கெய்க்வாட் - டுப்ளஸி ஜோடி பவர் ப்ளேயில் அதிரடி ஆட்டத்தை ஆடி ரன் சேர்த்தனர்.

சென்னை பேட்டிங்:

14வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி இன்றிரவு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது.

ஓப்பனர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், ஃபாப் டு ப்ளஸியும் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களை மிகவும் மந்த ஆட்டத்துடன் தொடங்கிய சென்னை வீரர்கள் 3வது ஓவரில் இருந்து அதிரடி பாணிக்கு மாறினர். ஷகிப் அல் ஹசன் வீசிய அந்த ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி ஒன்றை நொறுக்கினார். பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் பந்தை பவுண்டரிக்கு விரட்டியதால் அணியின் ஸ்கோர் எகிறியது.

முதல் 6 ஓவர்களில் பவர்பிளேயின் முடிவில் சென்னை அணி 50 ரன்களை எடுத்தது. சென்னை அணி 6வது முறையாக பவர்பிளேயில் 50 ரன்கள் எடுத்தது. மேலும் சென்னை அணி பவர்பிளேயில் 50 ரன்கள் அடித்த அனைத்து மேட்ச்களிலும் அந்த அணி வெற்றி பெற்று வந்திருக்கிறது சென்னை அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

ஏமாற்றிய ருதுராஜ்:

8 ஓவர்களில் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்கு பின்னர் 9வது ஓவரின் முதல் பந்திலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதிரடியாக ஆடி வந்த ருதுராஜ் கெய்க்வாட், சுனில் நரைன் பந்தில் 23 பந்துகளில் 27 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

ருதுராஜை தொடர்ந்து ராபின் உத்தப்பா டுப்ளஸியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடுத்தடுத்து சிக்ஸர்களை தூக்கி சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியது.

 

இந்நிலையில் அதிரடி பாணிக்கு மாறிய டு ப்ளஸி அபாரமாக அரை சதம் கண்டார். இவர் சிக்ஸ் அடித்து மிரட்டலாக அரை சதத்தை கடந்தார். டுப்ளஸி 35 பந்துகளில் 52 ரன்கள் அடித்து ஆடி வருகிறார்.

சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: