முழங்கால் காயத்தினால் ஐபிஎல் 2021 தொடரிலிருந்து விலகிய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் வேகமாக குணமடைந்து வருகிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் தனது யார்க்கர்கள் மூலம் அசத்தி யார்க்கர் நடராஜன் என்று பிரபலமடைந்த டி.நடராஜன், ஆஸ்திரேலியா தொடருக்கு இந்திய அணி சென்ற போது வலைப்பயிற்சி பவுலராகச் சென்று டி20, ஒருநாள், டெஸ்ட் என்று மூன்று சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் அறிமுகம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்டியா இவரிடம் கொடுத்து மகிழ்ந்தார், பிரிஸ்பன் டெஸ்ட்டில் வென்றவுடன் பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தூக்கி பெருமைப்படுத்தப்பட்டார்.
இவரது அபாரமான ஆட்டத்தினால் இந்தியா திரும்பிய போது அவரது சொந்த ஊரில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது, செண்டை, மேள தாளங்களுடன் ரசிகர்கள் நடராஜனைக் குளிப்பாட்டினர். ஆனால் காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தன் சர்வதேச கிரிக்கெட்டின் முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கும் நடராஜன் 2021 ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார். ஆனால் 2 போட்டிகளில் மட்டுமே ஆடி முழங்கால் காயத்தினால் வில்கினார்.
தோள்பட்டைக் காயமும் இருந்ததால் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு வர பயிற்சியில் ஈடுபட்டார். கடந்த மாதன் இவரது முழங்கால் காயத்துக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் யார்க்கர் நடராஜன், வீட்டிலிருந்த படியே உடல் புனரமைப்புப் பயிற்சி, உடற்தகுதி பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நடராஜன், “ஒவ்வொரு நாளும் வலிமையுடன் மீண்டு வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் நடராஜனின் யார்க்கர்களைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricketer natarajan, IPL 2021, T natarajan