CPL 2021: ஒஷேன் தாமஸ் அதிவேகத்தில் பவுல்டு ஆன கெய்ல்: டிவைன் பிராவோ அதிரடியில் செயிண்ட் கிட்ஸ் வெற்றி

ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து ஒஷேன் தாமஸிடம் பவுல்டு ஆன கெய்ல்.

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 2வது ஆட்டத்தில் டிவைன் பிராவோ தலைமை செயிண்ட் கிட்ஸ் அணி ஜேசன் ஹோல்டர் தலைமை பார்படாஸ் ராயல்ஸை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • Share this:
    கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 2வது ஆட்டத்தில் டிவைன் பிராவோ தலைமை செயிண்ட் கிட்ஸ் அணி ஜேசன் ஹோல்டர் தலைமை பார்படாஸ் ராயல்ஸை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    டாஸ் போடும் ஜேசன் ஹோல்டர் அருகில் டிவைன் பிராவோ


    பார்படாஸ் ராயல்ஸ் தலைவர் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய முதலில் பேட் செய்த செயிண்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 175/5 என்ற ஸ்கோரை எட்டியது. முகமது ஆமிர் 1 விக்கெட்டையும் ஒஷேன் தாமஸ் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    பார்படாஸ் ராயல்ஸ் விக்கெட்டை கொண்டாடும் செயிண்ட் கிட்ஸ் அணி


    தொடர்ந்து ஆடிய பாரபடாஸ் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 154/7 என்று முடிந்து தோல்வி தழுவியது. அதிகபட்சமாக ஷேய் ஹோப் 44 ரன்கள் எடுத்தார். கடைசியில் அசாம் கான் 3 சிக்சர்களுடன் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். கடைசியில் இறங்கிய ஹெய்டன் வால்ஷ் 2 சிக்சர்களுடன் 16 ரன்கள் விளாசியும் பயனில்லை. ஷெல்டன் காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் டோமினிக் ட்ரேக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    வெளுத்து வாங்கிய ஷெர்பானே ருதர்போர்டு.


    இன்னிங்ஸைத் தொடங்கிய செயிண்ட் கிட்ஸ் அணி தொடக்கத்தில் ஒஷேன் தாமஸ் வேகத்துக்கு கெய்ல் (12), டெவன் தாமஸ் (7), ஆசிப் அலி (8) ஆகியோர் விக்கெட்டுகளை சடுதியில் இழக்க முன்னதாக முகமது ஆமிர் அதிரடி வீரர் எவின் லூயிஸ் (6) விக்கெட்டை வீழ்த்த 39/4 என்று சரிவு கண்டது.

    ஒஷேன் தாமஸ் பந்தில் கிளீன் பவுல்டு ஆன கிறிஸ் கெய்ல்


    ஆனால் ஷெர்பானே ரூதர்போர்டு 43 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுக்க, டிவைன் பிராவோ 35 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்து இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்காக 69 பந்துகளில் அதிரடியாக 115 ரன்களைச் சேர்த்தனர். கடைசியில் பேபியன் ஆலன் 7 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 ரன்கள் விளாசினார்.

    ஷெர்பானி ருதர் போர்டு, ஜேசன் ஹோல்டர் பந்தில் கிளீன் பவுல்டு


    பார்படாஸ் ராயல்ஸ் அணி பந்து வீச்சு மோசமாக 16 வைடுகள் வீசி 23 ரன்களை உதிரிகள் வகையில் வாரி வழங்கியது. 20 ஓவர்களில் 175/5 என்ற மிகப்பெரிய இலக்கை செயிண்ட் கிட்ஸ் அணி எட்டியது.

    ஷேர்பானி ரூதர் போர்டு தன் அரைசதத்தைக் கொண்டாடுகிறார்.


    ராயல்ஸ் அணி சேசிங் உண்மையில் எழும்பவில்லை, முதல் ஓவரில் ஜான்ஸ்டன் சார்லஸ் (12) 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனால் தேவையின்றி ரன் அவுட் ஆகி வெளியேறினார். 2 ரன்களுக்கு கிளென் பிலிப்ஸ் அவரை அழைக்க இருவரும் ஒரே முனையில் முடிந்தனர். பிறகு டோமினிக் ட்ரேக்ஸ் ராயல்ஸ் பேட்டிங்குக்கு முட்டுக்கட்டைகள் போட்டார்.

    டிவைன் பிராவோ அடித்த சிக்சரை சிக்ஸ் ஆகாமல் தடுத்ஹ பார்படாஸ் வீரர் ஹெய்டன் வால்ஷ். அபாரத் தடுப்பு.


    இவருடன் சேர்ந்து ஸ்பின்னர்கள் ஆலன் மற்றும் பவாத் அகமட் 6 ஓவர்களில் வெறும் 31 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். ஷேய் ஹோப் மட்டுமே 38 பந்துகளில் 44 அடித்து ஹோப் கொடுத்தார்.

    பார்படாஸ் வீரர் அசாம் கான் 16 பந்துகளில் 28 ரன்கள் விளாசியும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.


    ஆனால் அவரும் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுக்க 104/5 என்று ஆனது. கடைசியில் அசாம் கான் 16 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 28 என்று காட்டடி காட்டினார், ஆனால் சேஸ் சாத்தியமாகவில்லை 154/7 என்று முடிந்தது பார்படாஸ்.
    Published by:Muthukumar
    First published: