ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Anushka Sharma - Virat Kohli : கொரோனா நிவாரணம்: விராட் கோலி, அனுஷ்கா சர்மா ரூ.2 கோடி நன்கொடை

Anushka Sharma - Virat Kohli : கொரோனா நிவாரணம்: விராட் கோலி, அனுஷ்கா சர்மா ரூ.2 கோடி நன்கொடை

விராட் கோஹ்லி - அனுஷ்கா ஷர்மா

விராட் கோஹ்லி - அனுஷ்கா ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இவரது மனைவியும் நடிகையுமான, அனுஷ்கா சர்மா ஆகியோர் நாட்டில் தலைவிரித்தாடும் கொரோனா இரண்டாம் அலை நிவாரணத்துக்காக ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அதாவது நிதிதிரட்டும் திட்டத்துக்கு இவர்கள் கொடுத்த ரூ.2 கோடி உதவி மூலம் ரூ.7 கோடி திரட்டும் திட்டம் எளிதாகியுள்ளது. மே மாதம் 4ம் தேதி ஐபிஎல் 2021 தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டதையடுத்து மும்பையில் வீடு வந்து சேர்ந்தார் விராட் கோலி.

  இந்நிலையில் கோலியும் மனைவி அனுஷ்கா சர்மாவும் கெட்டோ என்ற கிரவுட் ஃபண்டிங் பிளாட்பார்ம் மூலம் கொரோனாவுக்கு நிதி திரட்டி வருகின்றனர்.

  இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கொரோனா நிவாரணத்திற்காக ரூ.7 கோடி நிதி திரட்ட முடிவெடுத்துள்ளனர்.

  இதற்காக கிரவுட் ஃபண்டிங் தளமான கெட்டோ மூலம் #InThisTogether என்ற நிதிதிரட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் தொடக்கமாக ரூ.2 கோடி இவர்கள் நிதியளித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

  இந்த நிதிதிரட்டும் திட்டம் 7 நாட்களுக்கு கெட்டோ என்ற பிளாட்பார்மில் நடைபெறும் பிறகு இது ஏசிடி கிராண்ட்ஸ் நோக்கித் திருப்பப்படும். ஏசிடி கிராண்ட்ஸ்தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் கூட்டாளி ஆவர். ஆக்சிஜன் மெடிக்கல் சாதனங்கள், மருந்துகள், தேவையான மனித ஆற்றல், வாக்சின் விழிப்புணர்வு, டெலி-மெடிசின் ஆகியவற்றை இந்த ஏசிடி கிராண்ட்ஸ் வழங்கும்.

  இதுதொடர்பாக கோலி கூறும்போது, “நம் நாட்டில் வரலாற்றிலேயே முன்னெப்போதும் கண்டிராத நெருக்கடியை சந்தித்து வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து எத்தனைப் பேரை காப்பாற்ற முடியுமோ அத்தனை உயிர்களைக் காப்பாற்றுவது முக்கியம். கடந்த ஆண்டிலிருந்து மானிட துயரத்தைக் கண்டு நானும் அனுஷ்காவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம்.

  எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு உதவி செய்ய முடிவெடுத்துள்ளோம். இப்போதுதான் எப்போதையும் விட எங்களது ஆதரவு நாட்டுக்குத் தேவை.

  இதன் மூலம் பணமின்றி கஷ்டப்படுபவர்களுக்கு உதவ முன்வந்துள்ளோம். சக மனிதர்கள் நெருக்கடியில் இருக்கும் போது உதவ முன்வருவார்கள் என்று ஆழமாக நம்புகிறோம். நாம் இதில் ஒன்றுபடுவோம், நாம் இதனை முறியடித்து மீண்டெழுவோம்” என்றார்.

  அனுஷ்கா சர்மா கூறும்போது, “கொரோனாவினால் மனிதர்கள் படும் அவதியையும் துன்பத்தையும் பார்த்து நானும் விராட்டும் மனம் வெதும்பினோம். இந்த நிதி கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் என்று நம்புகிறோம். நாம் இதை உதவியின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Anushka Sharma, Virat Kohli