Home /News /sports /

COVID-19 Help for India | கொரோனா நிவாரணம்: ஐபிஎல் அணி ராஜஸ்தான் ராயல்ஸ்  ரூ7.5 கோடி நன்கொடை

COVID-19 Help for India | கொரோனா நிவாரணம்: ஐபிஎல் அணி ராஜஸ்தான் ராயல்ஸ்  ரூ7.5 கோடி நன்கொடை

கொரோனா நிவாரணம்: ராஜஸ்தான் ஐபிஎல் அனி நன்கொடை

கொரோனா நிவாரணம்: ராஜஸ்தான் ஐபிஎல் அனி நன்கொடை

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தலைவிரித்தாடும் சூழ்நிலையில் ஆங்காங்கே மருத்துவக் குறைபாடுகள், மருத்துவ உதவிகள் தட்டுப்பாடான சூழ்நிலையில் பலதரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன, இதில் ஐபிஎல் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய மக்களின் கொரோனா உதவியாக ரூ.7.5 கோடி நன்கொடை அளித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தலைவிரித்தாடும் சூழ்நிலையில் ஆங்காங்கே மருத்துவக் குறைபாடுகள், மருத்துவ உதவிகள் தட்டுப்பாடான சூழ்நிலையில் பலதரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன, இதில் ஐபிஎல் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய மக்களின் கொரோனா உதவியாக ரூ.7.5 கோடி நன்கொடை அளித்துள்ளது.

    ராஜஸ்தான் அணியின் ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஆசியன் டிரஸ்ட் ஆகியவற்றின் மூலம் ராஜஸ்தான் வீரர்கள், உரிமையாளர்கள் இந்திய கொரோனா நிவாரணத்துக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கமின்ஸ் பெரிய அளவில் பிஎம் கேர்ஸுக்கு நன்கொடை அளிக்க பிரெட் லீ ரூ.41 லட்சம் மதிப்புள்ள பிட்காயின் ஒன்றை இந்திய மக்களுக்காக நன்கொடை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிட்டிஷ் ஆசியன் டிரஸ்ட் பல முயற்சிகள் தொடர்பாக இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. குறிப்பாக திறமைகள் மற்றும் கல்வித்துறையில் இணைந்து பணியாற்றுகிறது. அறக்கட்டளையின் நிறுவனர் இளவரசர் சார்லஸ் அவசர நிலை உதவியாக ‘ஆக்சிஜன் ஃபார் இந்தியா’ என்பதைத் தொடங்கியுள்ளார்.

    இதன் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை விநியோகம் செய்வதில் இப்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது வளமூட்டப்பட்ட வாயுவை காற்றிலிருந்தே உற்பத்தி செய்கிறது. மருத்துவ சப்ளைகள் குறைபாடு உள்ள போது இது பெரிதும் உதவுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் மூலம் திரட்டப்படும் நிதி இந்தியா முழுதும் பயன்படும். முதலில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு உதவிகள் வழங்கப்படும். அணி உரிமையாளர்களும் வீரர்களும் இணைந்து இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்தக் காலத்தின் கட்டாயமான, அவசர தேவையான ஆக்சிஜனை நெருக்கடியிலிருந்து மீளவும் உதவும் முயற்சியாகும் இது” என்று ராஜஸ்தான் ராயல்ஸ் தெரிவித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2021-ல் இன்று மாலை நேர ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 5 போட்டிகளில் 2ல் வென்று 4 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona, IPL 2021, Rajasthan Royals

    அடுத்த செய்தி