Mike Hussey|CSK| சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா பாசிட்டிவ்

மைக் ஹஸ்ஸி.

சிஎஸ்கே அணிக்கு முன்பு ஆடிய, இப்போதைய பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    ஏப்ரல் மாதம் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரும் ஒரே விடுதியில்தான் தங்கியிருந்தனர். இந்நிலையில் கொல்கத்தா அணியின் சந்தீப் வாரியர், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த இரு வீரர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவரம் தொடர்பாக பிடிஐ வெளியிட்ட செய்தியில், ''மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் சோதனைக்கு அனுப்பியதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

    முன்னதாக, வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ஹைதராபாத் வீரர் விருத்திமான் சஹாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது எந்த அடிப்படையில் பயோ-பபுள் விதிமுறை மீறப்பட்டுள்ளது, எப்படி இது நடந்தது, இத்தனை வீரர்களுக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை விசாரித்து வருகிறது.

    ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.2000 கோடி இழப்பு என்று கூறப்படுகிறது, அதிகாரப் பூர்வ இழப்பு எவ்வளவு என்று தெரியவில்லை.

    மீதிப் போட்டிகளை கடந்த ஆண்டு போல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது, ஆனால் இந்தியாவிலிருந்து அணிகள் செல்ல வேண்டியிருப்பதால் சவுதி அரசு இதற்கு அனுமதி அளிக்குமா என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
    Published by:Muthukumar
    First published: