முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளார். அவர் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். ஆக்சிஜனை வாங்கி சப்ளை செய்வதற்காக, பிரதமர் கேர்ஸ்-க்கு 50,000 டாலரை நன்கொடையாக வழங்குவதாக பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தார்.
இந்நிலையில் அவரது செயலிலிருந்து ஊக்கம் பெற்ற மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீயும் ரூ.41 லட்சம் பெறுமான பிட்காயினை இந்தியாவின் ஆக்சிஜன் சப்ளைக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.
இது தொடர்பாக பிரெட் லீ கூறியது:
வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கான நிலையில் இருக்கிறேன் என்பதில் பெருமையடைகிறேன். இதனை கருத்தில் கொண்டு ஒரு பிட்காயின் கிரிப்டோ நிவாரணமாக இந்தியாவின் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவுகிறேன், என்றார் ஒரு பிட்காயினின் இன்றைய மதிப்பு ரூ.41 லட்சமாக இந்தியாவில் உள்ளது.
“இந்தியா எப்போதுமே எனக்கு இரண்டாம் வீடு.
இந்திய மக்கள் நான் ஆடும் காலத்திலும் தற்போது ஓய்வு பெற்ற காலத்திலும் என் மீது காட்டும் அன்பு அளப்பரியது. இது என்னுடைய இதயத்தில் ஒரு சிறப்பான இடம் வகிக்கிறது. இந்திய மக்கள் கொரோனாவினால் அவதிப்படுவதைப் பார்க்கும் போது என் நெஞ்சம் துயரப்படுகிறது” என்று கூறியுள்ளார் பிரெட் லீ.
மேலும் மக்களுக்கு அறிவுரையாக, “மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வீட்டிற்குள்ளேயே இருங்கள், கைகளை அவ்வப்போது அலம்புங்கள், தேவைப்பட்டாலே தவிர வெளியே தலை காட்டாதீர்கள். மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள்.
என்று கூறியுள்ளார் பிரெட் லீ.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.