விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL CORONA NEGATIVE FOR MS DHONI SADA SAN

கொரோனா நெகட்டிவ் - நாளை சென்னை வருகிறார் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன

கொரோனா நெகட்டிவ் - நாளை சென்னை வருகிறார் தோனி
தோனி
  • News18
  • Last Updated: August 13, 2020, 10:09 PM IST
  • Share this:
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். இதற்காக தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே அணி வீரர்கள் நாளை சென்னை வரவுள்ளனர்.  இதனால் வீரர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கேப்டன் தோனிக்கு ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொரோனோ பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்டது. பரிசோதனை முடிவு நெகட்டிவ் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனி சென்னை வருவது உறுதியாகியுள்ளது.

தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். பயிற்சி முடிந்து மீண்டும் கொரோனோ பறிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 22- ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கவுள்ளனர்.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading