• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மீண்டும் கர்ஜனை..! சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மீண்டும் கர்ஜனை..! சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழத்து

சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழத்து

ஐபிஎல் தொடரில் 4வது முறையாக பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிஎஸ்கே அணிக்கும் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும் முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சிஎஸ்கே அற்புதமாக செயல்பட்டது. மன்னர்கள் மீண்டும் கர்ஜித்தனர். நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஒவ்வொரு சிஎஸ்கே வீரர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி என்று பதிவிட்டுள்ளார்.



    இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி வீரர் டூ பிளெசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து கடினமான இலக்கை துரத்த ஆரம்பித்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் அரைசதம் அடித்தார்கள். ஆனால் டாப் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி வெளியேறியதால் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: