முகப்பு /செய்தி /விளையாட்டு / 16 கோடிக்கு ஓர்த்தே இல்லை.. கமெண்ட் செய்த பீட்டர்சன் : வான்கடேவில் வகுப்பெடுத்த மோரிஸ்

16 கோடிக்கு ஓர்த்தே இல்லை.. கமெண்ட் செய்த பீட்டர்சன் : வான்கடேவில் வகுப்பெடுத்த மோரிஸ்

கிறிஸ் மோரிஸ்

கிறிஸ் மோரிஸ்

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோரிஸ் அட்டகாசப்படுத்தினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

கிறிஸ் மோரிஸ்-க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் கொடுத்த 16 கோடி எல்லாம் ரொம்ப அதிகம். இவ்வளவு பெரிய தொகைக்கு மோரிஸ் தகுதியான வீரர் இல்லை என வார்த்தைகளை வீசினார்  கெவின் பீட்டர்சன். 2 மேட்ச் அடிப்பார் தொடர் முழுவதும் ஒரு நிலையான ஆட்டத்தை எல்லாம் எதிர்பார்க்கமுடியாது என விமர்சித்திருந்தார் பீட்டர்சன். ராஜஸ்தான் ஆடிய முதல் 4 போட்டிகளில் டெல்லிக்கு எதிரான போட்டியைத் தவிர மோரிஸிடம் பெரிய பர்ஃபாமன்ஸ் இல்லை. டெல்லிக்கு எதிரான போட்டியில் மட்டும் 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசியிருந்தார். அதில் சில கண்களை மூடி அடித்த ஷாட்டுகளும் அடங்கும். பந்துவீச்சில் மோரிஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தும் ராஜஸ்தான் அணி அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது.

அந்த நம்பிக்கையின் பலனாக பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோரிஸ் அட்டகாசப்படுத்தினார். சேப்பாக்கம் மைதானத்தில் ஸ்லோ இன்னிங்ஸ் பார்த்து வெறுப்படைந்த ஐபிஎல் ரசிகர்கள் வான்கடேவில் கொல்கத்தா வானவேடிக்கை காட்டும் என எதிர்ப்பார்த்தனர். சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பவர் ப்ளேயில் பல்ஸ் இல்லாமல் இருந்தாலும் 10 ஓவருக்கு பிறகு தினேஷ் கார்த்திக், ரஸல், பேட் கம்மின்ஸ் வானவேடிக்கை காட்டியிருந்தனர். சென்னைக்கு எதிரான போட்டியில் பவர் ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அதனை கவனத்தில் கொண்ட கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ரன்களை சேர்ப்பதில் கோட்டை விட்டனர்.

பவர் ஹிட்டர்கள் இருந்தும் கொல்கத்தாவால் ரன்வேட்டையில் ஈடுபடமுடியவில்லை. இயான் மோர்கன் விக்கெட் பெரிய பின்னடைவானது. மோரிஸ் சாதுர்யமாக செயல்பட்டு மோர்கனை ரன் அவுட் செய்தார். மோர்கன் விக்கெட் ராஜஸ்தானுக்கு புது தெம்பை கொடுத்தது. மோரிஸ் ஃபீல்டிங்கிலும் ஆக்டிவாகவே இருந்தார். மோரிஸ் ஓவரில் சிக்ஸர் விளாசினார் ரஸல். ஆபத்தான ஆண்ட்ரே ரஸலை அதே ஓவரில் காலி செய்தார் மோரிஸ். லைன் அன் லென்தில் மோரிஸ் கவனமாக இருந்தார். தினேஷ் கார்த்திக் கொல்கத்தாவுக்கு நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்தார். அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்பில் வீசிய பந்தை தினேஷ் கார்த்திக் ஒரு வெட்டு வெட்ட அது எக்ஸ்ட்ரா கவர் திசையில் நின்றிருந்த சக்காரியாவிடம் சிக்கியது. 18- வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவுக்கு முட்டுக்கட்டை போட்டார்.

20-வது ஓவரின் முதல் பந்தை பேட் கம்மின்ஸ் சிக்ஸருக்கு விரட்டினார். அவுட் சைடில் ஒரு ஸ்லோ டெலிவரியை வீசினார் மோரிஸ். இந்த பந்தை ஃபளாட்டாக கம்மின்ஸ் அடிக்க பராக் வசம் சிக்கினார். கடைசி பந்தில் ஷிவம் மாவி விக்கெட் பரிசாக கிடைத்தது. புல்டாஸாக அவுட் சைடில் வீசிய பந்தை ஸ்கூப் அடிக்க ஆசைப்பட்டு போல்டானார். 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தானுக்கு மோரிஸ் புதுதெம்பை கொடுத்துள்ளார்.

First published:

Tags: IPL 2021, Kolkata, Rajasthan Royals