IPL 2021 | CSK | புஜாரா எடுக்கும் புதிய அவதாரம்: ஸ்லாக் ஸ்வீப்கள், கிராஸ்பேட் ஷாட் சிக்சர்களைப் பறக்க விட்டு ஐபிஎல் பவர் ஹிட்டிங்கிற்குத் தயார்

வலையில் புஜாரா பயிற்சி.

ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல் 10-ல் தொடங்குகிறது, இதற்கு சிஎஸ்கே அணி தயார் செய்து வரும் நிலையில் அந்த அணியின் புஜாரா தனது பேட்டிங் ஸ்டைலையே சுத்தமாக மாற்றிக் கொண்டு சிக்சர்களைப் பறக்க விட்டுள்ளார். 

  • Share this:
ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல் 10-ல் தொடங்குகிறது, இதற்கு சிஎஸ்கே அணி தயார் செய்து வரும் நிலையில் அந்த அணியின் புஜாரா தனது பேட்டிங் ஸ்டைலையே சுத்தமாக மாற்றிக் கொண்டு சிக்சர்களைப் பறக்க விட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அருமையான முடிவை நடந்து முடிந்த ஐபில் ஏலத்தில் எடுத்தது. அது செடேஷ்வர் புஜாராவுக்கு ஒரு வாய்ப்பளிக்குமாறு சிஎஸ்கே அணியில் தேர்வு செய்ததே.

சத்தேஸ்வர் புஜாரா


அவர் ஏதோ டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலிஸ்ட் போலவும் அதிரடி ஆட வராது என்பது போலவும் ஒரு மாயை பரப்பப்படுகிறது, ஆனால் தான் அப்படியில்லை தனக்கும் வலது கையை இறுக்கப்பிடித்து இடது காலை விலக்கிக் கொண்டு விளாச முடியும் என்பதை அவர் நிரூபிக்கத் தயாராகி வருகிறார்.

அதாவது டி20 கிரிக்கெட்டுக்கு அடிப்படைத் தேவையான பவர் ஹிட்டிங்கிற்கு புஜாரா தயாராகி விட்டார் என்கிறது அவரது வலைப்பயிற்சி குறித்த செய்திகள்.

ஒரு டிவிட்டர் பயனாளர் பதிவிட்ட வீடியோவில் புஜாராவா அது என்று கேள்வி எழுப்புவது போல் மட்டையை நன்றாகத் தூக்கிப் பிடித்து ஹை பேக்லிப்டில் புதிய புஜாராவைக் காண முடிந்தது.

தீபக் சாஹரை முதலில் தூக்கி லெக் திசையில் அடித்தார், பிறகு ஸ்பின்னர் கரண் சர்மாவை ஸ்லாக் ஸ்வீப் செய்தார். மேலும் மேலேறி வந்து லாங் ஆன் மேல் தூக்கி அடிக்கிறார். எக்ஸ்ட்ரா கவரின் மேலும் தூக்கி அடிக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் அதிகம் மட்டையை தூக்காமல் ஆடுவார், ஆனால் இப்போது ஐபிஎல் பவர் ஹிட்டிங் தேவைகளுக்காக மட்டையை கூடுதலாகத் தூக்கிப் பிடித்து ஆடுகிறார்.

சட்டீஸ்வர் புஜாரா


புஜாரா கடைசியாக 2014-ல் ஐபிஎல் தொடரில் ஆடினார். தன் ஐபிஎல் கரியரை புஜாரா கொல்கத்தா அணியுடன் தொடங்கி 2010 வரை அந்த அணியில் தொடர்ந்தார். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 2011-2013 ஆடினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 2014-ல் இடம்பெற்றார்.

இதுவரை 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்தான் புஜாரா ஆடியுள்ளார். ஐபிஎல் தொடரில் 30 போட்டிகளில் ஆடியுள்ள புஜாரா 390 ரன்களை 22 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார். ஒரேயொரு அரைசதம்தான் எடுத்துள்ளார்.

சென்னை அணி தற்போது மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது, தங்களின் முதல் 5 போட்டிகளை இங்குதான் சிஎஸ்கே ஆடுகிறது. ஏப்ரல் 10ம் தேதி வலுவான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக தன் முதல் ஐபிஎல் 2021 போட்டியில் ஆடுகிறது சிஎஸ்கே.
Published by:Muthukumar
First published: