நானே பெரிய தோனி ஃபேன்.. அப்புறம்தான் இந்த ஆர்.ஆர். பவுலர் - தோனியை புகழ்ந்து தள்ளிய சர்காரியா

தோனி, சக்காரியா

போட்டிக்கு பின்னர் சக்காரியா சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 • Share this:
  மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா நேற்று மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்துள்ளார். ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிக்கொண்டிருந்த ரெய்னா இயான் பராக் ஓவரில் ஒரு சிக்ஸர் விளாசி அப்போது தான் கொஞ்ச செட்டிலானார். ராகுல் திவாடியா ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட ராயுடு ரன் வேட்டைக்கு தாயாராக இருந்தார். இந்த இருவரையும் ஒரே ஓவரில் தூக்கினார் சேத்தன் சக்காரியா.

  14-வது ஓவரில் இரண்டாவது பந்தில் அம்பத்தி ராயுடு கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆவுட் சைடு ஆஃப் ஸ்டெம்பில் வீசிய பந்தை தூக்கியடுத்து அம்பத்தி ராயுடு நடையைக் கட்டினார். அதேஓவரில் 5 வது பந்தை மிட் ஆஃப் திசையில் ரெயனா ட்ரைவ் செய்ய மோரில் கைகளில் பந்து தஞ்சமடைந்தது. 18-வது ஓவரின் இரண்டாவது பந்தில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார். ராயுடு விக்கெட் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ராயுடு களத்தில் இருந்திருந்தால் சி.எஸ்.கேவுக்கு கூடுதலாக ரன்கள் கிடைத்திருக்கும்.

  போட்டிக்கு பின்னர் சக்காரியா சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சக்காரியா, “ சிறுவயதில் இருந்தே நான் உங்களால் ஈர்க்கப்பட்டேன். இன்று உங்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். இதனை நான் என்றும் கொண்டாடுவேன். உங்களைப் போல் எவரும் இல்லை. கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் உத்வேகம் அளித்தமைக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: