Home /News /sports /

புதுப்பொலிவுடன் மாறுகிறது சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்

புதுப்பொலிவுடன் மாறுகிறது சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்

சென்னை சேப்பாக்கம்.

சென்னை சேப்பாக்கம்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பொலிவு பெறுகிறது, இதற்கான ஆயத்தக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

  அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பொலிவு பெறுகிறது, இதற்கான ஆயத்தக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

  சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் உலகின் பழம்பெருமை வாய்ந்த ஸ்டேடியங்களில் ஒன்று, ஒருகாலத்தில் சேப்பாக் பொங்கல் டெஸ்ட் வருடாவருடம் நடக்கும். எப்படி வெள்ளைக்காரர்களுக்கு பாக்சிங் டே டெஸ்ட்டோ அதுபோல் தமிழர்கள் திருநாளாகிய பொங்கலின் போது சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி என்பது பல இனிய நினைவுகளைக் கிளறக்கூடியது. ‘டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல்’ என்று எல்லா ஏரியாவிலிருந்தும் சென்னையில் சேப்பாக்கத்துக்கு பல்லவன் பேருந்துகள் விடப்படும். கிரிக்கெட் கிரிக்கெட்டாக இருந்த காலம் அது.

  ஜி.ஆர்.விஸ்வநாத்தின் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆடிய அந்த 97 இன்னிங்ஸ் முதல் சுனில் கவாஸ்கர் அடித்த 236 ரன்கள் இன்னிங்ஸ் வரையிலும் கபில்தேவ் பாகிஸ்தானுக்கு எதிராக 83 ரன்களை அதிரடியாக எடுத்து பிறகு 56 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தானை வென்றதும், சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தி பினிஷிங் இல்லாமல் தோற்றது, யாஷ்பால் சர்மா, ஜி.ஆர்.விஸ்வநாத்தின் இங்கிலாந்துக்கு எதிரான மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பும், அசாருதீனினின் அறிமுகத் தொடர் செஞ்சுரியும், பாகிஸ்தானுக்கு எதிராக இம்ரான் கான், வாசிம் அக்ரம், அப்துல் காதிர் உள்ளிட்ட ஜாம்பவான் பவுலிங்கை புரட்டி எடுத்து மண்ணின் மைந்தன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விளாசிய 123 ரன்களும், அனைத்திற்கும் மேலாக எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விரேந்திர சேவாகின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 319 ரன்களும், பரிதாப கருண் நாயர் எடுத்த முச்சதமும்...சேப்பாக் நினைவலைகளைக் கட்டுப்படுத்துவது கடினம்.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2001-ல் ஹர்பஜன் சிங் வின்னிங் ஷாட் அடிக்க இந்தியா திரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது என்று சேப்பாக்கம் புகழ்களை சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய தலைமுறயினருக்கு அவர்களின் ‘தல’ தோனியின் சிஎஸ்கே வெற்றிகள் இனிய நினைவுகளைக் கிளப்பலாம்.

  சேப்பாக்கத்தில் 1934ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி உள்பட பல்வேறு சாதனைகள் இந்த மைதானத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்த ஸ்டேடியத்தின் பெரும்பாலான பகுதி இடித்து புதுப்பிக்கப்பட்டது. அப்போது ஐ, ஜே, கே ஆகிய கேலரிகள் விதிமுறையை மீறி கட்டப்பட்டு இருப்பதாக சீல் வைக்கப்பட்டு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு கடந்த ஆண்டு தீர்வு காணப்பட்டது.

  Also Read: PAK vs WI| ரிஸ்வான், பாபர் ஆசம் சாதனை டி20 சேசிங்- மே.இ.தீவுகளுக்கு பாகிஸ்தான் 3-0 ஒயிட் வாஷ்

  இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியம் மேலும் புதுப்பொலிவு பெறுகிறது. அதாவது பெவிலியன் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் அமைந்து இருந்த பழைய கட்டிடங்களை இடித்து அதனை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இடத்தில் சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய வீரர்கள் தங்கும் அறை, கேலரிகள் உள்ளிட்டவை கட்டப்பட இருக்கின்றன.

  4 மாதங்களுக்குள் இந்த கட்டுமான பணியை முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Chepauk, Cricket

  அடுத்த செய்தி