2020-ல் டிவிட்டரை தெறிக்கவிட்ட ஹேஸ்டேக்குகள் - சிஎஸ்கேவின் #Whistlepodu 2ம் இடம்!
2020ம் ஆண்டில் டிவிட்டரை தெறிக்கவிட்ட ஹேஸ்டேக்குகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் #whistlepodu ஹேஸ்டேக் 2ம் இடத்தை பிடித்துள்ளது.

சிஎஸ்கேவின் #Whistlepodu 2ம் இடம்!
- News18 Tamil
- Last Updated: December 9, 2020, 5:40 PM IST
2020ம் ஆண்டில் டிவிட்டரை தெறிக்கவிட்ட ஹேஸ்டேக்குகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் #whistlepodu ஹேஸ்டேக் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
டிவிட்டர் இந்தியா, இந்த ஆண்டு முழுவதும் டிவிட்டரை தெறிக்கவிட்ட டிவிட்டர் ஹேஸ்டேக்குகளை அரசியல், சினிமா, விளையாட்டு என வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் #Whistlepodu ஹேஸ்டேக், விளையாட்டு உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 2வது ஹேஸ்டேக் என்ற சிறப்பை பெற்றுள்ளது. முதல் இடத்தை #IPL2020 என்ற ஹேஷ்டேக்கும், #Teamindia ஹேஸ்டேக் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2020 ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி சென்னை அணிக்கு மிக மோசமானதாக அமைந்தாலும், #whistlepodu ஹேஸ்டேக்கில் டிவிட்டரை தெறிக்கவிட்டிருப்பது, சென்னை ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜா மற்றும் அபுதாயில் நடத்தப்பட்டது. இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றது. 3 முறை சாம்பியனான சென்னை அணி இந்த ஆண்டு 14 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 8 போட்டிகளில் தோல்வியை தழுவி ஐ.பி.எல் வரலாற்றிலேயே முதன்முறையாக playoff-க்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் புள்ளிப்பட்டியலிலும் 7வது இடத்துக்கு சரிந்தது. தோனி தலைமையிலான சென்னை அணியின் மோசமான ஆட்டம் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால், சமூகவலைதளங்களில் #whistlepodu என்ற ஹேஸ்டேக்கின் கீழ் சென்னை அணியை விமர்சித்தும், வீரர்களை விமர்ச்சித்தும் அதிகளவில் மீம்ஸ்கள் உலா வந்தன. இதுவே, சென்னை அணியின் விசில்போடு ஹேஸ்டேக் டிவிட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஐ.பி.எல்லில் சென்னை அணி வெற்றி பெற சிறப்பான பங்களிப்பை தர தவறினாலும், டிவிட்டரில் சென்னை அணியின் ஹேஸ்டேக் 2வது இடத்தை பிடித்திருப்பது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிவிட்டர் இந்தியா, இந்த ஆண்டு முழுவதும் டிவிட்டரை தெறிக்கவிட்ட டிவிட்டர் ஹேஸ்டேக்குகளை அரசியல், சினிமா, விளையாட்டு என வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் #Whistlepodu ஹேஸ்டேக், விளையாட்டு உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 2வது ஹேஸ்டேக் என்ற சிறப்பை பெற்றுள்ளது. முதல் இடத்தை #IPL2020 என்ற ஹேஷ்டேக்கும், #Teamindia ஹேஸ்டேக் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2020 ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி சென்னை அணிக்கு மிக மோசமானதாக அமைந்தாலும், #whistlepodu ஹேஸ்டேக்கில் டிவிட்டரை தெறிக்கவிட்டிருப்பது, சென்னை ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜா மற்றும் அபுதாயில் நடத்தப்பட்டது. இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றது.
Sports or movies? Why fight or choose, you don't need a remote control on Twitter 😉
खेल या फिल्में? लड़ना या चुनना ही जरूरी क्यों हो, आपको ट्विटर पर रिमोट कंट्रोल की जरूरत नहीं है 😉 pic.twitter.com/zgzixgDKgv
— Twitter India (@TwitterIndia) December 8, 2020