Home /News /sports /

ஐ.பி.எல் 2022 : இன்று இரண்டு லீக் போட்டிகள் களைகட்டவுள்ளது.. முதல் வெற்றியை பதிவு செய்ய களம் காணும் 3 அணிகள்!!

ஐ.பி.எல் 2022 : இன்று இரண்டு லீக் போட்டிகள் களைகட்டவுள்ளது.. முதல் வெற்றியை பதிவு செய்ய களம் காணும் 3 அணிகள்!!

ஐ.பி.எல். கிரிக்கெட் யுத்தம் தினம் தினம் ரசிகர்களின் பிபியை எகிரச்செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் யுத்தம் தினம் தினம் ரசிகர்களின் பிபியை எகிரச்செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் யுத்தம் தினம் தினம் ரசிகர்களின் பிபியை எகிரச்செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் களைகட்டவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக அமையவுள்ளது. இரண்டு போட்டிகளின் வியூகங்களை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

    ஐ.பி.எல். கிரிக்கெட் யுத்தம் தினம் தினம் ரசிகர்களின் பிபியை எகிரச்செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்று விளையாடும் 4 அணிகளில் மூன்று அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்ய களமிறங்குகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    மும்பை டை பாட்டில் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐபிஎல் ஆரம்பித்து 10 நாட்களை கடந்துள்ளநிலையில் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் களம் இறங்குகின்றன. ஹாட்ரிக் தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை அணியும், ஹாரிக் தோல்வியை தவிர்க்க ஹைதராபாத் அணியும் போராடவுள்ளது.

    சென்னை அணியில் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. தீபக் சஹர் இல்லாதது, ஜடேஜா,மொயின் அலி சுழலில் சோபிக்காதது அணியை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.

    அத்துடன் பேட்டிங்கிலும் சென்னை சொதப்புகிறது என்று தான் சொல்லவேண்டும் கடந்த ஆண்டு ஆரஞ்சு தொப்பி வாங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் மூன்று போட்டிகளும் விளையாடி இரண்டு ரன்கள் அடித்துள்ளார். ஹைதராபாத் அணியுடன் அவரது ஸ்பார்க்கை காண்பிப்பார் என ஜடேஜா நம்பியுள்ளார்.

    உத்தப்பா, மொயின் அலி,ராயுடு மூவரும் சீராக ரன் அடிக்க தவறுகின்றனர். புதிய வரவு துபே-வை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். கேப்டன் தோனி டெத் ஓவரில் சிறப்பாக செயல்பட்டாலும் மற்ற வீரர்கள் கைகொடுக்காததால் வெற்றி கைநழுவுகிறது.

    ஆல்ரவுண்டர் பிராவோ ஃபார்முக்கு திரும்பியிருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. புதிய பந்தில் பந்துவீச முகேஷ் சௌத்ரி திணறுகிறார். ஜடேஜா மீதான அழுத்தத்திற்கும், விமர்சனத்திற்கும் இந்த போட்டியில் பதிலடி காத்திருக்கிறது என்றே நம்பலாம்...

    ஹைதராபாத் அணியில் பௌலிங் ஸ்ட்ராங்காவும், பேட்டிங் வீக்காவும் உள்ளது. வில்லியம்ஸன் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இமாலய இன்னிங்ஸ் ஆடவேண்டியது கட்டாயம்...

    புவி, நட்டு, வாஷி, உம்ரான் மாலிக் என பௌலிங் அசத்த பேட்டிங்கில் வில்லியம்ஸன், அபிஷேக், த் ரிபாதி, பூரன் என அனைவரும் சொதப்புகின்றன. ஆல்ரவுண்டர் மார்க்ரம், வாஷி நம்பிக்கை அளித்தாலும் அணியாக செயல்படுவதில் தவறவிடுகின்றனர்.

     இரு அணிகளும் இதற்கு முன் 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 12 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றிவாகை சூடியுள்ளது 4 போட்டிகளில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

    ராயல் சாலஞ்சர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்


    மாலை 7.30 மணிக்கு புனேவில் நடைபெறும் லீக் போட்டியில் டு பிளஸி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் - ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணியில் தீபக் சஹர் இல்லாதது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோ அதே போல் தான் மும்பை அணியில் ஆர்ச்சர் இல்லாதது. பேட்டிங்கில் ருத்துராஜ் சொதப்புவது போல் ரோஹித்தும் சொதப்பிக்கொண்டிருக்கிறார். இஷான் கிஷன், திலக் வர்மா சற்று ஆறுதல் அளித்தாலும் பந்துவீச்சில் கோட்டை விடுகின்றனர், பும்ரா விக்கெட் எடுக்க திணறுகிறார் அத்துடன் ரன்களையும் வாரி வழங்குகிறார். இவருக்கு போட்டியாக டேனியல் சாம்ஸ், மில்ஸ், பாசில் தம்பி என அனைவரும் ரன்களை அதிகமாக விட்டுக்கொடுக்கின்றனர் இதிலிருந்து மீண்டால் மட்டுமே வெற்றி வசப்படும்.

    சூர்ய குமார் அணிக்கு திரும்பியதுடன் ஃபார்மில் இருப்பது மும்பை ரசிகர்களை நிம்மதியடையச்செய்துள்ளது. இன்றைய போட்டியில் மேஜிக் நிகழ்த்தி முதல் வெற்றியை ருசிக்க காத்திருக்கிறது மும்பை...

    பெங்களூரு அணியை பொருத்தவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 150க்கு மேல் ரன்களை குவித்து பேட்டிங்கில் அசுர பலத்தில் உள்ளது. இந்த நிலையில் புதுமாப்பிள்ளை மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியிருப்பது எதிரணியை மிரட்டுகிறது. டு பிளஸி,விராட்,மேக்ஸ்வெல்,தினேஷ் கார்த்திக் என அதிரடி பேட்டிங்கில் அசத்த பௌலர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் பந்துவீசுவது அணியின் வெற்றியின் ரகசியமாக அமைந்துள்ளது.

    இரு அணிகளும் இதற்கு முன் 29 போட்டிகளில் விளையாடியதில் மும்பை அணி 17 ஆட்டங்களிலும், பெங்களூர் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: CSK, IPL 2022, Mumbai Indians

    அடுத்த செய்தி