விளையாட்டு

  • associate partner

சென்னை vs மும்பை நேருக்கு நேர்... அதிக வெற்றி யார் தெரியுமா?

சென்னை vs மும்பை நேருக்கு நேர்... அதிக வெற்றி யார் தெரியுமா?
ரோஹித் - தோனி
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 3:05 PM IST
  • Share this:
மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் பெரும் பரபரப்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஐ.பி.எல் 13-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. அபுதாபயில் நடைபெற உள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளதால், சென்னை - மும்பை அணிகள் மோதினாலே, அந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு மற்ற போட்டிகளை விட அதிகமாக இருக்கும்.


இதுவரை இரு அணிகளும் 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றது. 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த 2019 தொடரில் 2 லீக், பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி உட்பட 4 போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிபெற்றது.

இதனால், தொடர் தோல்விக்கு சென்னை அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading