ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் இதில், 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.405 வீரர்களில் இருந்து 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் இந்த ஏலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனான வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். இவருக்கு ரூ. 2 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவரை வாங்க அணிகள் அதிகம் ஆர்வம் காட்டவிலை. அவரை கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
அடுத்த வீரராக இங்கிலாந்து அணியின் ஹாரி பரூக்கை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவியது. ஹாரியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹேரியை ஏலத்தில் எடுத்தது.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த சாம் கரனுன்கு (Sam Curran) இந்த ஏலத்தில் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய வீரராக இருந்தவர் சாம் கரன். டி20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய சாம் கரன் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
Also Read : ஐபிஎல் ஏலம் 2023 : அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
சாம் கரனை ஏலத்தில் எடுக்க முதலில் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகள் போட்டியிட்டன. ஏலம் 14 கோடிக்கு மேல் சென்றதும் சிஎஸ்கே விலகியது. பின் பஞ்சாப் அணியும் மும்பையும் போட்டியின. இறுதியாக சாம் கரனை பஞ்சாப் அணி ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை சாம் கரன் படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சாம் கரனுக்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரினை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்கள் இருவருக்கும் அடுத்தப்படியாக பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) ரூ.16.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே. சிஎஸ்கே அணிக்கு ரவீந்திர ஜடேஜா, மொயின் அலிக்கு அடுத்தப்படியாக சிறந்த ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார்.
பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்த உடன் அவரை பாராட்டி சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தது. அதேபோல் சிஎஸ்கே வீரரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியும் பென் ஸ்டோக்ஸ்க்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
Valimai update then, #Thunivu buy now!🥳#SuperAuction #WhistlePodu 🦁💛 pic.twitter.com/FynjzEY3p6
— Chennai Super Kings (@ChennaiIPL) December 23, 2022
இதனை தனது ட்விட்டர் பகிர்ந்த சிஎஸ்கே வலிமை அப்டேட்டுக்கு பிறகு துணிவு வாங்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளது. மொயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து இந்த ட்வீட்டை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, IPL 2023, IPL Auction