சிஎஸ்கே செய்யும் சூப்பர் மரியாதை:தமிழ்நாடு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், மைதான பராமரிப்பாளருக்கு நிதி அன்பளிப்பு

முன்னாள் வீரர்கள், கிரவுண்ட்ஸ்மெனுக்கு சிஎஸ்கே கவுரவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி தமிழ்நாடு அணிக்கு ஆடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மைதானப் பராமரிப்பாளர்களுக்கு சிறப்பு கவுரவம் வழங்கவிருக்கிறது.

  • Share this:
    சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி தமிழ்நாடு அணிக்கு ஆடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மைதானப் பராமரிப்பாளர்களுக்கு சிறப்பு கவுரவம் வழங்கவிருக்கிறது.

    இது தொடர்பாக சிஎஸ்கே அணி விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 85 ஆண்டுகளாக தமிழ்நாடு அணி பல்வேறு கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளது, அவர்கள்தான் இன்று கிரிகெட் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறது. 1950, 60-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு அவ்வளவாக நிதிச்சலுகைகள் இல்லை.

    எனவே அவர்களது பங்களிப்புக்கான அங்கீகாரத்தை வழங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒன் டைம் பேமெண்டாக கிரிக்கெட் வீரர்கள், கிரவுண்ட்ஸ்மென், அம்பயர்கள் உள்ளிட்ட மேட்ச் நிர்வாகிகள் ஆகியோருக்காக 5 லட்சம் ரூபாய் தொகையை நிர்ணயித்தது.

    சிஎஸ்கே அணியின் தாய்வீடு தமிழ்நாடுதான், சென்னைதான், எனவே இந்த முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ.7 லட்சம் வழங்குகிறோம். இந்த எண் தோனிக்கு பிடித்த 7ம் எண் அவரது ஜெர்சி எண், எனவே 7 லட்சம் அளிக்க முடிவெடுத்துள்ளோம். சிஎஸ்கேவின் 2 கோடியே 70 லட்சம் ரசிகர்கள் இந்த சாதனையை கொண்டாட வேண்டும் என்று ஊக்குவிக்கிறது.” என்று கூறியுள்ளது.

    இதில் பேட்ஸ்மென் விக்கெட் கீப்பர் பி.எஸ். ராஜகோபால் மற்றும் நஜாம் ஹுசைன், எஸ்விஎஸ் மணி உள்ளிட்டோர் பெயர்கள் அடங்கும். இதில் ராஜகோபால் 1967 ஆஸ்திரேலியா தொடரை நூலிழையில் இழந்தார், ரஞ்சியில் அந்த சீசனில் 800 ரன்கள் எடுத்தும் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

    ஹுசைன் மைசூர், மெட்ராஸ் மாற்றும் ஜாலி ரோவர்ஸ் அணிக்கு 1960களில் ஆடினார்.

    மணி என்ற வீரர் தெற்கு மண்டல அணிக்கு லெஜண்ட்களான விவி குமார், வெங்கட்ராகவன், ஏ.ஜி. மில்கா சிங், ஜெய்சிம்மா, பிரசன்ன, கிரிபால் சிங் போன்றவர்களுடன் ஆடியவர். இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இருந்துள்ளார்.

    அதே போல் ஆர்.பிரபாகர் என்ற ஆல்ரவுண்டர் தமிழ்நாடு அணிக்காக தொடக்க ஓவர்களை வீசும் கட்டர்களில் சிறந்த பவுலர் ஆவார். பின்னாள் களமிறங்கி பேட்டிங் ஆடுவார். தி இந்து டிராபியில் 30 ஓவர் போட்டியில் 160 ரன்களை 16 சிக்சர்கள், 14 பவுண்டரிகளுடன் விளாசியது அந்த ஆட்டத்தைப் பார்த்தவர்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கக் கூடியது.

    அதே போல் கே.பார்த்தசாரதி, சென்னை மைதான பராமரிப்பாளராக 1973 முதல் 2013 வரை இருந்துள்ளார். 3 உலகக்கோப்பை ஆட்டங்கள் உட்பட பல ஐபிஎல் போட்டிகள் என்று அனைத்து வடிவ பிட்ச் தயாரிப்பிலும் நிபுணர். 1986-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான புகழ்பெற்ற டை மேட்ச் பிட்சை அமைத்தவர் இவர்தான்.

    இவர்களை சிஎஸ்கே கவுரவித்து நிதியன்பளிப்பும் அளிக்கிறது.
    Published by:Muthukumar
    First published: