• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிஎஸ்கே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்... பஞ்சாப் வெற்றி பெற 135 ரன்கள் இலக்கு

சிஎஸ்கே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்... பஞ்சாப் வெற்றி பெற 135 ரன்கள் இலக்கு

csk vs pbks

csk vs pbks

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகியதால் சிஎஸ்கே 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 53-வது லீக் போட்டியில் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டூ-பிளெசிஸ் மற்றும் ருதுராஜ் களமிறங்கினார்கள்.

    ருதுராஜ் 12 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த வந்த சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் ஓற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமலும் ராபின் உத்தப்பா 2 ரன் மற்றும் அம்பாதி ராயுடு 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கேப்டன் மகேந்திர சிங் தோனி 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 12 ரன்களே மட்டுமே எடுத்து அவரும் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி 61 ரன்களில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் தொடக்க வீரர் டூ-பிளெசிஸ் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி சார்பில் டூபிளெசிஸ் 55 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: