ஐபிஎல் மினி ஏலம் 2023 நேற்று கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக சாம் கரனை பஞ்சாப் அணி ரூ.18.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவருக்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமருன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸை சி.எஸ்.கே. ரூ. 16.25 கோடிக்கு வாங்கியுள்ளது.
சிஎஸ்கே ஐபிஎல் ஏலத்தில் 7 வீரர்களை ஏலத்தில் உள்ளது. அவர்களில் முக்கியமான வீரராக பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் உள்ளனர். மேலும் ரஹானே, நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷித், அஜய் மண்டல், பகத் வர்மா ஆகியோரையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் கோப்பையை 4 முறை( 2010, 2011, 2018 மற்றும் 2021) வென்றுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் போட்டிகள் உடன் வெளியேறியது. தோனி தனது சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கடந்த ஐபிஎல் தொடரில் ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் ஜடேஜா கேப்டன் பொறுப்பில் சரியாக ஜொலிக்க முடியாமல் திணறியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பு தோனியிடம் சென்றது.
சிஎஸ்கே லீக் சுற்றுடன் வெளியேறிய போது அடுத்த சீசனில் சிஎஸ்கே வலிமையான அணியாக மீண்டும் களமிறங்கும் என்று தோனி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதும் அடுத்த கேப்டனாக யார் என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில் தான் சிஎஸ்கே பென் ஸ்டோக்ஸை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் தோனிக்கு பின் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : ஐபிஎல் ஏலத்தில் ரூ. 18.5 கோடிக்கு சாம் கரனை வாங்கியது ஏன்? பஞ்சாப் அணி உரிமையாளர் விளக்கம்
ஐபிஎல் ஏலத்திற்கு பின் சிஎஸ்கே அணியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்து கணிப்புகள் பல வெளி வந்துள்ளன. அதில் 6 ஆல்ரவுண்டர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ளனர். இதனால் சிஎஸ்கே வலுவான அணியுடன் வரும் ஐபிஎல் சீசனில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே உத்தேச அணி
வீரர் | ரோல் |
ருத்துராஜ் கெய்க்வாட் | ஓபனர் |
பென் ஸ்டோக்ஸ் | ஆல்ரவுண்டர் |
மொயின் அலி | ஆல்ரவுண்டர் |
அம்பாதி ராயுடு | மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் |
சிவம் துபே | ஆல்ரவுண்டர் |
எம்.எஸ்.தோனி | கேப்டன் |
ரவீந்திர ஜடேஜா | ஆல்ரவுண்டர் |
தீபக் சஹர் | ஆல்ரவுண்டர் |
கேல் ஜேமிசன் | ஆல்ரவுண்டர் |
மஹீஸ் தீக்ஷனா | சுழற்பந்து |
முகேஷ் சவுத்ரி | வேகப்பந்து |
சிஎஸ்கே அணி வீரர்கள்
தோனி, கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, பென் ஸ்டோக்ஸ், ரஹானே, நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா,
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.