CSK vs SRH | சென்னை அணியில் முக்கிய மாற்றங்கள்?

சிஎஸ்கே

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னை - ஹைதரபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சிஎஸ்கே அணி இதுவரை மும்பை வான்கடே மைதானத்தில் வெற்றி பெற்று வந்த நிலையில் அடுத்த போட்டிகள் டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    சிஎஸ்கே 5 போட்டிகளில் விளையாடி 4 -ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே முதலிடத்திற்கு முன்னேறும். இதற்கு மாறாக 5 போட்டிகளில் விளையாடி உள்ள சன்ரைசர்ஸ் அணி 1 வெற்றி மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் அந்த அணி களமிறங்குவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.

    இதனிடையே  ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக விளையாடமல் இருந்த மொயீன் அலி அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. டெல்லி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இம்ரான் தாஹீர் அணியில் நீடிக்க வாய்ப்புள்ளது. இதனால் பிராவோ இன்றைப் போட்டியில் களமிறங்குவது கேள்விக்குறியாகவே உள்ளது.

    சிஎஸ்கே உத்தேச அணி : ருதுராஜ், டூ-பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, சாம் குர்ரன், தீபக் சாஹர், சர்துல் தாகூர், இம்ரான் தாஹீர்
    Published by:Vijay R
    First published: